பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
பாஜக எம்.பி-ஐ கைது செய்ய
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிட்ஸ் பூசன் சரண்சிங்-ஐ கைது செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக்கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவளித்தும் இநதிய மாதர் சங்க சம்மேளனம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் கார்ல்மார்க்ஸ் ஆகியோர் தலைமையில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் உத்திராபதி துவக்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வெ.சேவையா, மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தனசீலி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் எஸ்.ராஜலட்சுமி, மீனா, சந்திரகலா, பானுமதி, சிலம்பரசி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பிரகாஷ், சந்தோஷ், அருள்மொழி ஈஸ்வரன், கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.