செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை-செப்பர்டு சார்பாக உலக நீதி நாள் விழிப்பணர்வு கூட்டம் !
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை- செப்பர்டு சார்பாக உலக நீதி நாள் பற்றிய விழிப்பணர்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மேலப்பச்சக்குடி கிராமத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச மற்றும் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின் மேலாண்மை புலத்தின் புல முதன்மையர் முனைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் வணிகவியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஜான் ஆகியோர் அன்பு அமைதி சமாதானம் சகோரத்துவம் சமநிலை மனப்பான்மை பகிர்வு நீதி மற்றும் நேர்மை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
மேலப்பச்சக்குடியின் ஊர் தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் குமார் மற்றும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வந்தவர்களை வணிகவியல் துறையின் இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர் அஸ்வின் வரவேற்றார் முடிவில் அருண் குமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை சரண்ராஜ் தொகுத்து வழங்கினார். அறுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை வணிகவியல் துறையின் இரண்டாம் ஆண்டு இளங்கலை கல்வி குழு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.