சங்ககாலப் பூக்களின் பயன்பாடு – நூல் வெளியீட்டு விழா ! (யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 8 )

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரமான நூல் என்பதில் பெருமை கொள்கிறேன்” – மருத்துவர் லெட்சுமி நந்தகுமார் பெருமிதம் !

யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 8 இன் நிகழ்வு 26.10.2024ஆம் நாள் நடைபெற்றது. இந் நிகழ்வு நூல் வெளியீட்டு விழாவாக அமைந்திருந்தது. திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், யாவரும் கேளீர் நிகழ்வின் புரவலருமான முனைவர் ரெ.நல்லமுத்து அவர்கள் எழுதிய ‘சங்ககாலப் பூக்களின் பயன்பாடு’என்னும் நூலை, நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய திருச்சி மனநல ஆலோசகர் மருத்துவர் லெட்சுமி நந்தகுமார் வெளியிட்டார்.

Frontline hospital Trichy

தமிழியல் பொதுமேடை – 8 நூலின் முதல் படியைச் சித்த மருத்துவர் மா.ஆ.கனிமொழி பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரையாற்றினார். விழாவுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் லெட்சுமி நந்தகுமார் அவர்களுக்கு ஆசிரியர் ரூபா பயனடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய சித்த மருத்துவர் மா.ஆ.கனிமொழி அவர்களுக்கு சமூக ஆர்வலர் தி.சு.வேலாம்பிகை பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் சிறப்பு விருதாளர் திருச்சி அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசாக நூல்களை வழங்கி சிறப்பு செய்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நிகழ்வில் சங்ககாலப் பூக்களின் பயன்பாடு என்னும் நூலை வெளியிட்ட மருத்துவர் லெட்சுமி நந்தகுமார் அவர்களின் உரையில்,“ 250 பூக்களின் பயன்பாடு பற்றி இந்நூல் மிகவிரிவாகக் கூறுகின்றது. இந்திய மொழிகளில் இந்தப் பூக்கள் எந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றது என்ற தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. அச்சாக்கத்திலும், வடிவமைப்பிலும் உயர்ந்த தரம் கொண்டதாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று உரையை நிறைவு செய்தார்.

நூலினைப் பெற்றுக்கொண்ட சித்த மருத்துவர் மா.ஆ.கனிமொழி அவர்கள் தன்னுடைய சிறப்புரையில்,“ உலக நாகரிகத்தில் மலர் பண்பாடு என்பது தமிழர்களுக்கு மட்டுமே உரிதானதாகும். தொல்காப்பியத்தில் ஒவ்வொரு மன்னரும் அணிந்திருந்த மலர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குறளில் அனிச்சப்பூ பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழியல் பொதுமேடை – 8 சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப் பாடல் ஒன்றில் 96 பூக்களின் பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டில்தான் மலர்களுக்கு 7 பருவங்கள் குறிக்கப்பட்டுள்ளன. முருங்கை பூ மஞ்சள்காமாலை நோய்க்குப் பயன்படுவது என்பதை இப்போது உலகம் உணர்ந்து கொண்டு நம்முடைய மருத்துவத்தை ஏற்கத் தொடங்கியுள்ளனர்” என்று உரையை முடித்துக்கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஏற்புரை வழங்கிய முனைவர் ரெ.நல்லமுத்து, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத் துறையின் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி உள்ளிட்டு, பெருந்திட்ட ஆய்வுக்கும், இந்த நூலகத்திற்கும் உதவியாக அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். தொடர்ந்து வளனார் கல்லூரி தமிழாய்வுத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் இரேவதி ஜெடிஆர் நன்றி கூறினார்.

தமிழியல் பொதுமேடை – 8 நூலாசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து அவர்களுக்குத் திருச்சி மிசா தி.சாக்ரடீஸ் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். வளனார் கல்லூரிப் பேராசிரியர்கள் மணிகண்டன், அடைக்கலராஜ், டைட்டஸ், வில்சன், யோகராஜ் ஆகியோர் நூலாசிரியருக்குச் சிறப்பு செய்தனர். சிறப்பு விருந்தினர்களுக்குச் சான்றிதழ்களையும், நூல்களைப் பரிசாகவும் அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் வழங்கி சிறப்பு செய்தார். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி நூலாசிரியர் சிறப்பித்தார்.

— ஆதவன்.

யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 6ஐ படிக்க

திரைப்பட பாடல்கள் வழியும் அறிவு பெறலாம் முனைவர் பி.கலைமணி பாட்டும் + உரையும் !

தமிழியல் பொதுமேடை – 7

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.