அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு.ஆறுமுகத்தமிழன் சிந்தனையின் தொடர்ச்சிதான் தமிழ் மரபு ! பாகம் -01

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

க்தி மரபு சமத்துவத்தை ஆதரிக்குமா? பக்தி மரபு சமத்துவத்தை முன்னிறுத்தி உள்ளதா? என்ற கேள்விகள் எழும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற சொலவடை நம்மிடம் உண்டு. தமிழ்நாட்டில் கோயில் இல்லாத ஊரே கிடையாது. ஏன் தெருவே கிடையாது.

சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களை உருவாக்கி விடுவார்கள். தமிழ்நாட்டில் பெருங்கோயில்கள் பல உள்ளன. ஏன் சாலைகளில் கோயில்களை உருவாக்குகின்றார்கள். ஏனென்றால் ‘எங்களுக்குக் குடும்பிட சாமிகள் வேண்டும். அதற்காக கோயில்களை அமைக்கின்றோம்’ என்கிறார்கள்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

புதுப்புது சாமிகள் வரும். பழைய சாமிகளைக் கும்பிட்டு … கும்பிட்டு நம்ம ஆளுங்களுக்குச் சலிப்பு வந்துவிட்டது. புதிய புதிய சாமிகளைக் கண்டுபிடிப்பார்கள். நமக்கு சாய்பாபா, ஆதியோகி போன்றவர்கள் பழக்கம் கிடையாது. புதிய புதிய சாமிகள், புதிய புதிய வழிபாட்டு முறைகள் என்று புதிது புதிதாக எல்லாம் மாறுகின்றன.

அா்த்தமுள்ள ஆன்மீகம்பளிங்கு கல்லில் சாமி செய்யும் வழக்கம் நம்மிடம் கிடையாது. நம் சாமிகள் எல்லாம் நல்ல கருப்பு. அதுவும் கருங்கல்லில் செய்த சாமிகள் இன்னும் நல்ல கருப்பா இருக்கும். அது இன்னும் கருப்பாக தெரிய சாமி மீது எண்ணெய்யை ஊற்றி வைப்பான். பார்ப்பதற்கு நல்ல கருப்பா… பளபளப்பா தெரியும். தற்போது கோயில் வழிபாட்டு முறைகளில் கருப்பு என்பது மறைந்து, மார்பிளில் செய்த வெள்ளையான சாமிகள் இப்போது வந்துவிட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சிவனின் வடிவம் நமக்குத் தெரியும். சிவன் இப்படித்தான் இருப்பார் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், சிவன் சிலை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும். அதற்கு ஆதியோகி என்று பெயர்வேறு வைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் எந்த சாமியும் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்காது. தெய்வங்களின் பார்வை கீழ்நோக்கிதான் இருக்கும். காரணம் சாமிக்குக் கீழாக இருக்கும் மக்களுக்கு அருள்பாலிக்கவேண்டும் என்பதால் சாமிகளின் பார்வை என்பது கீழ்நோக்கிதான் இருக்கும்.

அா்த்தமுள்ள ஆன்மீகம்மேல்நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சாமி பொம்மையைப் போல் உள்ளது. அந்தப் பொம்மை மேல்நோக்கி பார்த்துக்கொண்டு, கண்ணை வேறு மூடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய மரபில் சிலை வடித்தாலே, வரைந்தாலோ கண் திறக்கும் என்னும் வழக்கம் என்ற ஒன்று நடக்கும். கண் திறந்தால்தான் சாமி மக்களைப் பார்த்து அருள்பாலிப்பார் என்ற நம்பிக்கை உண்டு.

அந்த சாமிக்கு ஆதியோகி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த சாமி போன்று இருக்கும் பொம்மை இடுப்புக்குக் கீழே எதுவும் இல்லை. யோகத்திலும் இல்லை. அப்படியனால் அது எப்படி யோகியாக முடியும்? அந்த பொம்மைக்கு ஆதியோகி என்று பெயர் வைக்கிறார்கள். அப்படி பெயர் வைப்பது என்பது அறிவுக்குப் பொருந்தாத வகையில் உள்ளது. நான் இறை நம்பிக்கை உள்ளவன். இறையை மறுதலிப்பவன் அல்ல. என்றாலும் சாமிகளுக்குப் பெயர் வைப்பது என்பது அறிவுக்குப் பொருத்தமில்லாமல் நம்மைக் கருத்துக் குருடர்களாக ஆக்குகிறார்கள்.

 

உரையாக்கம்: முனைவர் தி.நெடுஞ்செழியன்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.