தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவேந்தல் : யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 12.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெரியார் என்னும் பண்பாளரைப் போற்றுவோம் – கவிஞர் நந்தலாலா நெகிழ்ச்சி உரை !

அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்திவரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 12 ஆம் நிகழ்வு, தந்தை பெரியார் மறைந்த 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, “பெரியார் போற்றுதும் … பெரியார் போற்றுதும்” என்னும் பொருண்மையில் 28.12.2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வை பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்தார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை - 12.“பெரியாரும் பெண்ணியமும்” என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கிய, திருச்சி கூத்தூர் விக்னேஷ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் பெரியார் பிஞ்சு சு.அ.யாழினி, “இன்றைக்கு மிகச் சாதாரண பெண்களும் சாதனைப் பெண்களாக சமூகத்தில் வலம் வருகின்றார்கள் என்றால் அதற்குத் தந்தை பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைதான் அடிப்படை காரணம்.” என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களுடன் அழுத்தமாக பதிவு செய்தார்.

தலைமை உரையாற்றிய, திருச்சி இலால்குடி வட்டம், வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுநிலை ஆசிரியர் செல்வி, பார்ப்பன எதிர்ப்பு, பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த சமூக நீதியின் காவலராக மட்டுமல்ல; தனிப்பட்ட ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு தருணங்களிலும் பெரியார் எவ்வாறு தவிர்க்கவியலாத சக்தியாக பங்காற்றியிருக்கிறார் என்பதை வாழ்வில் தாம் எதிர்கொண்ட சம்பவங்களிலிருந்தே அவரது மாண்புகளை பட்டியலிட்டார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை - 12.சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடியுமான கவிஞருமான நந்தலாலா,“ பெரியாரை நாத்திகர் என்று சொல்லி, கடவுள் மறுப்பாளர் என்று சொல்லி அவரைக் காலி செய்ய நினைக்கின்றார்கள். ஆனால், மக்கள் அதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றார்கள்.

தந்தை பெரியார் நல்ல மனம் படைத்த உயிர். அவரைப் போல வெளிப்படையான மனிதரே கிடையாது. வெளிநாட்டுக்குச் சென்று நிர்வாணமாக நின்று, நிர்வாண சங்கத்தில் சேர்ந்துவிட்டேன் என்று புகைப்படத்தைப் பத்திரிக்கையில் வெளியிட்டவர். அவரது தனிப்பட்ட வாழ்வில் உண்மையாக இருந்தவர்.

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை - 12.தந்தையின் சார்பாக போட்ட ஒரு கையெழுத்தை தான் போடவில்லை என்று நீதிமன்றத்தில் ஒரு பொய் சொல்ல மறுத்து, அதற்காக சிறை செல்ல நேரிட்டாலும் பரவாயில்லை என்று அதற்காக தன்னை மனதளவில் திடப்படுத்திக்கொண்டவர் பெரியார். அதனால்தான் இன்றும் அவர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார். சாராயம் குடிக்காமல் புகைப் பிடிக்காமல் பொய் சொல்பவர்கள்தான் அயோக்கியர்கள். மது அருந்துதல் என்பது உடல் சம்பந்தப்பட்டது. ஒழுக்கம் சம்பந்தப்பட்டது அல்ல என்றார் பெரியார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எல்லாரும் வரலாற்றைப் பற்றி பேசுவார்கள் அல்லது வியாக்னம் செய்வார்கள். தந்தை பெரியார் மட்டும்தான் காரல் மார்க்ஸைப்போல வரலாற்றை மாற்றினார். அவரை யார் சந்திக்கச் சென்றாலும் கையில் மூத்திரச் சட்டியுடன் வாழ்ந்தபோதும், அந்த வலியோடே எழுந்து நின்று வரவேற்பார். அது, 15 வயது சிறு வயது பையன் சென்றாலும் அப்படித்தான்.

யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை - 12.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைதான் பெரியார் உயிரோடு இருந்தபோது வைக்கப்பட்ட முதல் சிலை. இடம் கொடுத்தவர் லூர்துசாமிபிள்ளை. சிலை திறப்புவிழாவில் 1967 தேர்தலில் வெற்றிப்பெற்ற அண்ணாவும் கலந்துகொள்கிறார். தோல்வியடைந்த காமராசரும் கலந்துகொள்கிறார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்வின் முழுமையான வீடியோ பார்க்க.

அண்மையில் டி.எம்.கிருஷ்ணா என்னும் கர்நாடக இசை பாடகர் மியூசிக் அகாடெமிக்கு கைலி கட்டிக்கொண்டு பாட சென்றிருக்கிறார். பெரியாரை யாரையெல்லாம் பாதித்திருக்கிறார் என்பதைப் பார்க்கமுடிகின்றது” என்பதாக, பெரியாரை பற்றி இதுவரை யாரும் அறிந்திராத புதிய தகவல்கள் பலவற்றை அருவியாய் பொழிய செய்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் சிறப்பு விருதாளர் திருச்சி தி.அன்பழகன் ஆகியோர் விருந்தினர்களுக்கு நூல்கள் மற்றும் பயனடைகள் வழங்கி சிறப்பித்தார்கள். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்பு விருந்தினர்களுக்குச் சான்றிதழ்களையும் நூல்களையும் பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

– ஆதவன்.

யாவரும் கேளீர் -தமிழியல் பொதுமேடை – 11 ஐ படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக்

அண்ணல் அம்பேத்கரின் கருத்துகள் எல்லா மக்களும் உரியது – பேராசிரியர் பிரிட்டோ ஸ்டாலின் பெருமிதம் ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 11

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.