ஏழை’கிரி’ ஏழைக்கானது அல்ல ! மலைவாசிகள் – சுற்றுலாப்பயணிகள் குமுறல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏழை’கிரி’ ஏழைக்கானது அல்ல ! மலைவாசிகள் – சுற்றுலாப்பயணிகள் குமுறல் !
இயற்கை எழில் சூழ்ந்த , ஏலகிரி மலையில் உடலை ஊசிபோல் குத்தும் குளிரை இதமாக அனுபவிக்கவே மக்கள் இம்மலைக்கு வருகிறார்கள். அதே நேரத்தில் , தனியார் சொகுசு விடுதிகள் ஏராளமாக முளைத்துவிட்டன.

ஏலகிரி மலை
ஏலகிரி மலை

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இந்த விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மறுபுறம் பழங்குடியினர் கலாச்சாரத்தை நவீன கலாச்சார சக்திகள் சீரழித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஏலகிரிமலை , தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இருக்கும் இம்மலையில் சுமார் பதினான்கு கிராமங்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். இம்மலை மீது மாலை வேளையில் ஊசிபோல் குத்தும் குளிரை இதமாக அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏழை மக்கள் இந்த குளிரை வெட்டவெளியில் தான் அனுபவிக்க முடியும். இரவில் தங்கி அனுபவிக்க முடியாது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஏலகிரி மலை
ஏலகிரி மலை

காரணம் இங்குள்ள ரிச்சார்ட் அறைகளின் கட்டணம்தான். சாதாரண விடுதி அறையில் இரண்டு பேருக்கான தினசரி கட்டணமே ரூ 2 ஆயிரத்தில் தொடங்கி ரூ 15 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். அதனால் ஏழைகளுக்கானது அல்ல. பெங்களூர் சென்னை போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள் அவ்வப்போது இங்கு “பார்ட்டிகள்” அரேஞ்ச் செய்யும் அதில் பெரும் பணக்கார இளசுகள், கும்பல் கும்பலாக தங்கி மது, மாது, போதை பவுடர் என சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஏழு பெண்கள், இரண்டு ஆண்களோடு ஒரு சொகுசு விடுதியில் தங்கினர். அதில் குப்பத்தைச் சேர்ந்த ஆந்திராவின் டோலிவுட் சினிமா நடனப் பெண் ஹீமா (25) , என்பவர் தங்கிய அறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அறையிலும் உடலிலும் போதைப் பொருட்கள் இருந்துள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பார்ட்டிக்காக வந்தவர் தற்கொலை செய்து கொண்டதாக ஏலகிரி மலை போலீஸ் வழக்கை முடித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

A.R.தங்க கோட்டை
A.R.தங்க கோட்டை

தொடர் புகார் காரணமாக அப்போது ரிச்சார்ட்டுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகள் கார்ப்பரேட் கம்பெனி இளசுகள் அறைகுறை ஆடைகளுடன் போதை பவுடரோடு சிக்கினர். அதில் பெரும்பாலும் பெரிய இடத்து இளசுகள் என்பதால் எச்சரித்து அனுப்பி விட்டது போலீஸ். சில விடுதிகளில் வார இறுதி நாட்களில் பார்ட்டிகள் என்ற பெயரில் கூத்தும் கும்மாளமும் விடியும் வரை நடக்கும்.

இங்கு பெரும்பாலான சொகுசு விடுதிகள் பிரபல நடிகர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அரசியல் புள்ளிகளுக்கு சொந்தமானது எது நடந்தாலும் போலீஸ் கண்டுகொள்ளாது. இரவெல்லாம் குடித்து கூத்தடித்துவிட்டு விடிந்ததும் மலையை விட்டு இறங்கும் இளசுகளில் சிலர் சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்கி உயிரை விடுவது தொடர்கதையாகி வருகிறது.

மலை விவசாயிகள் குமுறல் ஏன் ?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மலை விவசாயிகள் குமுறல்
மலை விவசாயிகள் குமுறல்

இந்த நிலையில்தான் அத்தனாவூர் ஊராட்சி கோட்டூர் கீழ்கொல்லை வட்டத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் சொகுசு விடுதியான “தங்க கோட்டை” என்ற நட்சத்திர விடுதி பொழுது போக்கு அம்சங்களுடன் இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் இருக்கும் விவசாய விளை நிலங்களில் வெளியேற்றப்படுவதாக , கோட்டூர் கீழ்கொல்லை வட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளான , கிருஷ்ணன் மகன் சஞ்சீவி, மற்றும் ராஜேந்திரன் அம்சவேணி, ஆகியோர் ஊடகங்கள் முன் மே -13 அன்று குற்றம்ச்சாட்டினர். மேலும், இங்குள்ள விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு நீர் அருகில் உள்ள கிணறுகளிலும் , விளை நிலங்களிலும், நேரடியாக கலந்து வருகிறது.

தங்க கோட்டை" என்ற நட்சத்திர விடுதியில் இருந்து வெளியேறும்
தங்க கோட்டை” என்ற நட்சத்திர விடுதியில் இருந்து வெளியேறும்

இதனால் தங்களுடைய நிலத்தில் எந்த பயிர் விளைவித்தாலும் அந்த பயிர் அழுகி போகிறது. குடிக்கவும் ,குளிக்கவும் பயன்படுத்தினால் எங்கள் குழந்தைகள் வரை அனைவருக்கும் தொற்று நோய் ஏற்பட்டு , மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிடுகிறது. எனவே அரசாங்கமும் அதிகாரிகளும் , தங்க கோட்டை சொகுசு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

என்ன சொல்கிறது தங்க கோட்டை ?

இந்த குற்ச்சாட்டு குறித்து AR “தங்ககோட்டை சொகுசு விடுதியின்” செல்போன் அழைப்பை தொடர்பு கொண்டோம். மறுமுனையில் பேசிய நபர் பெயர் மற்றும் பொறுப்பை கூறமுடியாது என தெரிவித்து ”அந்த மாதிரி தகவல் எங்களுக்கு வரவில்லை” என்றவர் அடுத்த நொடியே ”அந்த விவசாயிகள் பொய்யான தகவலை தெரிவித்து உள்ளனர். அந்த கிணறு எங்களுடையதுதான் , இது குறித்து யாரோ ஒரு பெயரை குறிப்பிட்டு அவருக்கு நியூஸ் அனுப்பிட்டேன்” என்று முன்னுக்குப்பின் முரணாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசி மேலும் பேச நேரமில்லை என்று ரொம்ப அலுத்துக்கொண்டு அழைப்பை துண்டித்தார்.

கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் அவர்களோடு பேசினோம், மலைவாழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஒற்றுமைக்கு பெயர் போனது பழங்குடியினர் வாழ்க்கை. மலைமீது விளையும் விவசாய பொருட்கள் இயற்கையானது சுகாதாரமானது.

எனவே, ஏலகிரி மலையில் உள்ள கோட்டூர் விவசாயிகளின் பேட்டி வேதனை அளிக்கிறது. எங்களின் வாழ்வாதாரமே விவசாயம்தான் அதைக்கூட இந்த ரிச்சார்ட்கள் கழிவு நீரை வெளியேற்றி பயிர்களையும் குடி தண்ணீரையும் சீரழிக்கிறது. மலை மீதுள்ள விவசாய நிலங்களை பாதுக்காக்க வேண்டும் மலைவாசிகளின் கோரிக்கையை அரசாங்கம் செவி கொடுத்து கேட்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

– மணிகண்டன் .கா

படங்கள் -ஆற்றல் பிரவின்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.