பி.டி.மாஸ்டருக்கும் இங்கிலீஷ் டீச்சருக்கும் கல்யாணம் ! நடத்தி வச்சது ஐசரி கணேஷ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பி.டி.மாஸ்டருக்கும் இங்கிலீஷ் டீச்சருக்கும் கல்யாணம்! நடத்தி வச்சது ஐசரி கணேஷ் ! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள ‘P T சார்’ வரும் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மே.16-ஆம் தேதி நடைபெற்றது.

PT Sir MOVIE
PT Sir MOVIE

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

‘P T சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 வது படமாகும். இதனைக் கொண்டாடும் விதமாக, மொத்தக்குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ, “ஹிப்ஹாப் ஆதியின் மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டு சில விசயங்கள் புதுமையாக  செய்துள்ளோம். ஆதி அண்ணா கடுமையாக உழைத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும்”.

நடிகை பிரணிகா, “இந்தப்படத்தில் ஆதிக்கு தங்கையாக நடித்தது ரொம்ப சந்தோசம்.  அதிலும் என் முதல் படமே வேல்ஸ் பிலிம்ஸில் செய்வது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சக படமாக இருக்கும். இந்தப்படம் புது அனுபவமாக இருந்தது”.

நடிகை மதுவந்தி, “இந்தப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். இந்தக்குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாக பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் கேரக்டர் . இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தக் குழுவிற்கு முழு சுதந்திரம் தந்த, வேல்ஸ் ஐசரி சாருக்கு என் நன்றி”.

PT Sir MOVIE - ஐசரி கணேஷ்
PT Sir MOVIE – ஐசரி கணேஷ்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

நடிகை அனிகா சுரேந்திரன், “நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. இந்த கதாபாத்திரம் தந்த இயக்குநர் கார்த்திக் சாருக்கு நன்றி. தயாரிப்பு தரப்பினருக்கும் என் நன்றிகள்.  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

நடிகை காஷ்மீரா பர்தேசி, ஒரு வருடம் முன் ஆரம்பித்த படம். ஐசரி சாருக்கு நன்றி. மிக அற்புதமான குழுவினர். எப்போதும் ஷூட்டிங் சந்தோசமாக இருக்கும். கார்த்திக் இப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். ஆதியுடன் இதுஇரண்டாவது படம். மிக சந்தோசமாக இருந்தது. மிக மிக ஜாலியானவர், திறமையாளர் .இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இருக்கும்”.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், “ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிம்ஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக  இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள்”.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், “வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப்பள்ளிகளிலும் பிடி சாருக்கும் அந்த டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும். நான் படித்த பள்ளியிலும் இருந்தது.

பிடி மாஸ்டருக்கு ம் இங்கிலீஷ் டீச்சருக்கும் நானே கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்.அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள் அந்தளவு படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை. அவரின் அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்”.

HipHop Aadhi PT Sir Movie
HipHop Aadhi PT Sir Movie

நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, “வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, கே.பாக்யராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.