‘வெப்பன்’ டோட்டலி டிஃபெரண்ட் சினிமா !

0

‘வெப்பன்’ டோட்டலி டிஃபெரண்ட் சினிமா! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ இம்மாத இறுதியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மே.17-ஆம் தேதி சென்னை வி.ஆர்.மாலில் உள்ள பி.வி.ஆர்.தியேட்டரில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சத்யராஜ் சார் லெஜெண்ட்! வசந்த்ரவி சார், தான்யா ஹோப் இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாருக்கு பிரேம் வைத்தது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடன் வேலை பார்த்த எல்லோருக்குமே நன்றி!”.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கோகுல், “படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் சாருக்கும் இயக்குநர் குகன் சாருக்கும் நன்றி. நிறைய சிஜி பணிகள், கரெக்‌ஷன் செய்திருக்கிறோம். புதிய டெக்னாலஜியான ஏஐ உபயோகப்படுத்தி இருக்கிறோம். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சிறந்த பணியை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கு “.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “சமூகத்திற்கு தேவையான கருத்தோடு படம் வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி”. கலை இயக்குநர் சுபேந்தர், ”இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் குகன் சாருக்கு நன்றி. எல்லோருமே சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”.

- Advertisement -

எடிட்டர் கோபி, “விஷூவலாக படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில் அடுத்தகட்டத்திற்கான நகர்வு தான் ‘வெப்பன்’. இயக்குநர் கார்த்திக் யோகி, “இயக்குநர் குகன், வசந்த் ரவி ஆகியோர் எனது நண்பர்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்!”.

இயக்குநர் அஸ்வின், “குகன், நான், கார்த்திக் யோகி மூன்று பேருமே நாளைய இயக்குநர் சமயத்தில் இருந்தே நண்பர்கள். குகனுக்கு இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்க கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இருந்தது”.

4 bismi svs

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “அப்போதிருந்து இப்போது வரை சத்யராஜ் கலக்கி வருகிறார். அவர் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘வெப்பன்’ படத்தின் போஸ்டர், டிரெய்லர் வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு ஜானரை இயக்குநர் முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தொழில்நுட்ப குழுவினருக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள்! “.

Weapon Movie
Weapon Movie

ஸ்டண்ட் இயக்குநர் சுதீஷ், “பட்ஜெட் பற்றி யோசிக்காமல் படம் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிறைய ஆக்‌ஷன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் செய்த சத்யராஜ் சாருக்கு நன்றி. வசந்த் ரவி 100% சிறப்பாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார். உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்”.

நடிகர் மைம் கோபி, “இயக்குநர் குகன் திறமைசாலி. சத்யராஜ் அண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். உங்கள் ஆதரவு தேவை!”படத்தின் கதாநாயகி தான்யா ஹோப், “இந்தப் படத்தில் நான் வேலை செய்ததை என்னுடைய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்”.

நடிகர் வசந்த் ரவி, “தமிழில் சூப்பர் ஹியூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. சத்யராஜ் சாரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்தப் படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹியூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள்.

நடிகர் சத்யராஜ், “படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு செலவு செய்துள்ளார் தயாரிப்பாளர் மன்சூர். இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்கள் என்றால் அது தயாரிப்பாளர் மன்சூரும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்!”.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.