அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி !

திருச்சியில் அடகு நகையை விற்க

டாக்டர். ராகிணி MD தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ,  மகப்பேறு & பெண்கள் நல மருத்துவம் முதலாம் ஆண்டு பட்டமேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த மருத்துவர் – சாலை விபத்தில் சிக்குண்டு தீவிர சிரக் காயம் ஏற்பட்டு மூளைச்சாவு நிலை அடைந்து விட்டார் என்பதைக் கண்ணீருடன் தெரிவிக்கிறேன்.

அன்னார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். கல்வியிலும் கலை விளையாட்டிலும் விற்பன்னராகத் திகழ்ந்தவர். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் என்ன கூறி தேற்றுவது? ஆழ்ந்த இரங்கல் மனிதாபிமானத்தின் உச்ச நிலையாம்,  தங்களது தீராத ஆற்றாமை மற்றும் துயரத்தில்,  புத்திர சோகத்தில் கூட அன்னாரின் பெற்றோர் மேன்மையான செயலைப் புரிந்துள்ளனர் ஆம்… அன்னாரின் உறுப்புகளைக் கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில்  கூட பிறர் நலன் நாடும் குணம் – ஈகையின் உச்சம்

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார் “

என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி..

கண்ணீருடன்….

 

  -Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

   பொது நல மருத்துவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.