திருச்சியில் 81 மாணவ மாணவியர்களுக்கான இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம் நிறைவு !
திருச்சியில் 81 மாணவ மாணவியர்களுக்கான இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம் நிறைவு !
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்க துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை, தமிழ்நாடு அரசு, நிதியுதவியுடன் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் திட்டத்தை (Young Student Scientist Programme- YSSP-2023-24) 2023 டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 9-ஆம் தேதி வரை 15 நாட்கள் (Residential YSSP) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியின் வழியாக பள்ளி மாணவ மாணவியர்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும் ஆய்வு நோக்கில் கற்கவும் நடைமுறை வாழ்க்கையில் அறிவியலை புரிந்து கொண்டு வாழ்வதற்கு வாய்ப்பாக அமையும் நோக்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் முதன்மை பெறும் எண்பது (81) மாணவ மாணவிகள் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாணவர்களது அறிவியல் பாட வகுப்புகளிலும் பிற்பகலில் அறிவியல் சோதனை வகுப்புக்களிலும் பயிற்சி பெற்றனர். கற்றுணர்தல் நிகழ்வாக அண்ணா அறிவியல் மையத்திற்கும் கல்லூரி அருங்காட்சியகத்திற்கும் மற்றும் டால்மியா சிமெண்ட் தொழிற்சாலைக்கும் சென்று வந்தனர்.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மாணாக்கர்கள் தாங்கள்; அறிவியல் பூர்வமாக கற்று உணர்ந்த வேதியல், தாவரவியல், இயற்பியல், கணினி அறிவியல், உயிரியல், மின்னனுவியல் பாடங்களை மையப்படுத்தி 48 காட்சி பொருட்களை இளம் மாணவர் அறிவியில் அறிஞர்கள் கல்லூரி மாணாக்கர்களின் உதவியோடு காட்சி படுத்தினர்.
இந்த அறிவியல் கண்காட்சியை பார்வையிட வந்தவர்களுக்கு காட்சி பொருட்கள் இயங்கும் மற்றும் செயல்படும் விதத்தை பற்றி எடுத்து கூறினார்கள். இக்கண்காட்சியை கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே ச அவர்கள் தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளியின் வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பயிற்சியில் பங்குபெற்ற மாணாக்கர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே ச அவர்கள் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் என்கிற சான்றிதழ்களை வழங்கினார். கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்ட பொருட்களை நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு சிறந்த காட்சி பொருட்களை செய்த மாணாக்கர்களுக்கு சிறப்பு பரிசினை கல்லூரியின் செயலர் அருள்முனைவர் அமல் சே ச அவர்கள் வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் 23 பள்ளிகளிலிருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 பள்ளிகளிலிருந்தும் 81 மாணவ மாணவியர் இப்பயிற்சியில் கலந்து கொண்டார்கள். விரிவாக்கத் துறை செப்பர்டு இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச வந்தவர்களை வரவேற்றார். முடிவில் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார். முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ரோஸ்வெனிஸ் துணை
ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் ஆகியோரும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்களான ஜெயசீலன் யசோதை மற்றும் அலுவலக உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டும் வகையில் மாணவ மாணவிகளின் பெற்றோருடன்; விதை ஊன்றி முளைத்த நாற்றுப்பைகளை மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் எடுத்துசென்றார்கள்.