குளிர்காலத்தில் சுவாச பயிற்சிகள் மூலம் நுரையீரலை சுத்தப்படுத்தலாம் !

0

குளிர்காலத்தில் நுரையீரல் ஆரோக்கியத்திற்கான சுவாச பயிற்சி வகுப்பு!

ஆரோக்கியத்திற்கான சுவாச பயிற்சி வகுப்பு
ஆரோக்கியத்திற்கான சுவாச பயிற்சி வகுப்பு

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் குளிர்காலத்தில் நுரையீரல் ஆரோக்கியத்திற்கான சுவாச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் இசபெல்லா ராஜகுமாரி, செயலர் அருட்சகோதரி ஆனி சேவியர் வாழ்த்துக்களுடன் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா, திட்ட அலுவலர்கள் முனைவர் டாலி மேரி, பேராசிரியை குழந்தை பிரியா முன்னிலையில் சிறப்பு விருந்தினர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கலந்து கொண்டார்.

விஜயகுமார் மாணவிகளிடம் பேசும் போது…. குளிர்ந்த காலநிலையில் நமது நுரையீரலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. ஆரோக்கியமான மனிதர்களில் கூட, குளிர்ந்தநிலை மற்றும் வறண்ட காற்று அவர்களின் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவாக ஏற்படும். காற்றின் தரம் குறைவது ஆஸ்துமா, ஒவ்வாமை, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சில தீவிர நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். சுவாசப்பாதைகளை குறுகச் செய்கிறது. இதனால் சுவாசித்தல் கொஞ்சம் கடினமாகிறது.

- Advertisement -

4 bismi svs

நீங்கள் நாசி வழியாக சுவாசிக்கும் போது, மூக்கு, தொண்டை மற்றும் மேல் காற்றுப்பாதை வழியாக செல்லும் குளிர்ந்த காற்று வெப்பமடைந்து ஈரப்பதமாகிறது. எனவே அது குறைந்த காற்றுப்பாதையை அடையும் நேரத்தில், அங்குள்ள ஈரப்பத அடுக்கை சீர்குலைக்காத அளவுக்கு வெப்பமாக இருக்கும். அதுவே குளிர்காலங்களில் வாய் வழியாக சுவாசிக்கிறார்களானால், காற்று வெப்பமடைந்து ஈரப்பதமாக இருக்காது. எனவே கீழ் காற்றுப்பாதையில் உலர்த்தும் விளைவு சுவாச பிரச்சனை அறிகுறிகளுக்கு பங்களிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிலும், ஆஸ்துமா, அழற்சி சுவாச நிலையில் உள்ளவர்களில், குளிர்ந்த காற்று காற்றுப்பாதைகளுக்கு அதிக அழற்சி செல்களைத் தூண்டும், இது சுவாச கோளாறை ஏற்படுத்துகிறது. இப்பிரச்சினையில் இருந்து மீள காலையில் எழுந்ததும் நல்லெண்ணையை எடுத்து ‌‍‌‌ஐந்து நிமிடங்கள் எண்ணெய் நுரைக்க நன்றாக வாய் கொப்பளியுங்கள். பிறகு எண்ணெயை துப்பிவிட்டு, பல் துலக்க ஆரம்பிக்கலாம். இவ்வாறு தினமும் ஆயில் புல்லிங் செய்வது காற்று மாசுபாட்டால் ஏற்படும் வாய் வறட்சியைக் குறைக்கலாம்.நீரை நன்கு கொதிக்க வைத்து, அந்நீரில் ஆவி பிடிக்கலாம். இந்த முறையில், நீராவியை உள்ளிழுக்கும் போது, காற்றுப் பாதைகள் திறந்து, நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது.

அதே நேரத்தில் சுவாச பயிற்சிகளை செய்வது நுரையீரலை வலுப்படுத்தும். சுவாச நோய்களிலிருந்து விலகி இருக்கவும் உதவி செய்யும். கபல்பார்தி மற்றும் பாஸ்த்ரிகா சுவாச பயிற்சிகளை ஒவ்வொரு நாளும் காலையில் நுரையீரலை சுத்தப்படுத்தவும் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டவும் சுவாச பயிற்சியினை செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணினி அறிவியல பாடப்பிரிவு இளங்கலை மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக மாணவி ஷபானா வரவேற்க, நிறைவாக ஜெசிந்தா நன்றி கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.