அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நடுரோட்டில் இளைஞர் ரகளை! கண்டுகொள்ளாத காவல்துறை!

திருச்சியில் அடகு நகையை விற்க

தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே கஞ்சா மற்றும் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி உள்ளது.

காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை கட்டுப்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். திமுக ஆட்சியில் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே கஞ்சா மற்றும் குடிபோதையில் இளைஞர் நடுரோட்டில் பாட்டில் மற்றும் கற்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்களை, முதியவர்களை, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் போதையில் பேசிக்கொண்டு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமத்துடன் சென்றனர்.

முதல்வர் பிறந்தநாள்

போதையில் ரகளைஇது சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை இளைஞர் அப்பகுதியில் ரகளை செய்தும் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து எந்த ஒரு காவல் அதிகாரியோ காவலர்களோ வந்து அந்த இளைஞரை கட்டுப்படுத்தவில்லை. காவல் நிலையம் அருகிலே குடிபோதையில் இளைஞர் ரகளை செய்தது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தேவதானப்பட்டி மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை காவல்துறை உதவியுடன் நடைபெறுவதாகவும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மது விற்பனை செய்பவா் மீது நடவடிக்கை எடுக்காததே இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

—  ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.