அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யூடியூப் பார்த்து இதை செய்யலாமா? வேண்டாமே விபரீதம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒரு யூடியூப் காணொளி அதைப் பார்த்து உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு இறந்த சகோதரி சகோதரியை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குவோம்.

முதலில் இந்ந நிகழ்வு குறித்து ஆராய்வோம். ஒரு யூடியூப் சேனலில், வெங்காரம் (BORATE) எப்படி அதை சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் வாரம் இரண்டு கிலோ எடை குறையலாம் என்பது குறித்த குறுங்காணொளி கிடைக்கிறது.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பொதுவாக, சித்த மருத்துவத்தில் சித்த மருத்துவர்கள் வெங்காரத்தை சிறுநீர் பாதை தொற்று, இரைப்பைப் புண், தோல் நோய் சிகிச்சை ஆகியவற்றில் உபயோகிக்கின்றனர்.

சித்த மருத்துவம் (BSMS) முறையாகப் பயின்று பட்டம் பெற்ற மருத்துவர்களுக்குத் தெரியும். வெங்காரத்தை அப்படியே மருந்தாக உபயோகிக்க முடியாது. மாறாக அதை சரியான முறையில் சுத்திகரிக்க வேண்டும். மேலும், ஒரு மருந்து வழங்கப்படும் போது
அதற்குரிய
சரியான நோய் (RIGHT DISEASE)
சரியான மருந்து ( RIGHT MEDICINE)
சரியான அளவு ( RIGHT DOSE)
சரியான வழியில் ( RIGHT ROUTE)
சரியான கால அளவில் வழங்கப்பட( RIGHT REGIMEN) வேண்டும்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அதை விடுத்து பொதுவாக காணொளியில் வெங்காரம் சாப்பிட்டால் எடை குறையும் என்று கூறுவதில் உள்ள பிரச்சனையைத் தான் இப்போது காண்கிறோம்.

கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்; இனி யூடியூபில் SD வீடியோக்களையும் HD  தரத்தில் வெளியிடலாம்பாராசிட்டமால் குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல் குறையும் என்று கூறுவதைப் பார்த்து விட்டு தன் இஷ்டத்துக்கு ஒரு டோஸ் அளவில் பிறந்த குழந்தைக்கு பாராசிட்டமால் கொடுத்தால் அதுவும் ஆபத்தில் தான் முடியும்.

நோய் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்ற ஒரு சாதாரண அடிப்படை அறிவு நம்மிடையே இல்லாமல் போனது தான் இங்கு பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது.

வெங்காரம் சாப்பிட்டு எடை குறைக்க வேண்டும் என்று அந்த சகோதரி விரும்பியிருந்தால், ஒரு சித்த மருத்துவரை நேரில் சந்தித்து
வெங்காரம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு எடை குறைப்புக்கு அவரிடம் முறையான மருத்துவம் கேட்டிருக்கலாம்.

வெங்காரம் (BORIC ACID) அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே இந்த சகோதரி வெங்காரத்தை சாப்பிட்டதால் அதனால் நஞ்சுத்தன்மை உண்டாகி கடும் வயிற்றுப் போக்கு , குடல் இரைப்பைப் புண்அதனால் ஏற்பட்ட ரத்தப் போக்கு சிறுநீரக செயலிழப்பு
ஆகியவற்றால் உயிரிழந்திருக்க வேண்டும்.

மக்கள் உணர வேண்டிய விஷயம் உலகின் எந்த மூலையில் நீங்கள் வசித்தாலும் சரியே..

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நீங்கள் மருந்து என்று எதை உட்கொண்டாலும் சரியே மருந்தென்று உண்டென்றால் அதற்கு சாதகமான விளைவு உண்டென்றால்
கட்டாயம் பாதகமான பக்கவிளைவுகள் இருந்தே தீரும்.

பக்க விளைவுகள் இன்றி மருந்து தருகிறேன் என்று யாரும் கூறினால் அதை தயவு கூர்ந்து நம்பாதீர்கள். நம்பினால் கை சேதம் உங்களுக்கு மட்டுமே.

ஒரு மருந்தின் சாதக பாதக அம்சங்களை அறிந்து வழங்கும் அனுபவமும் அறிவும் அந்த மருந்தைப் பற்றிக் கற்றறிந்த மருத்துவர்களுக்கு உண்டென்று நம்புங்கள்.

Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,
Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,

சாட் ஜிபிடி, ஏ ஐ ஜெமினி, உன் குழாயடி (YOU TUBE) சண்டைகள், இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் இதையெல்லாம் மட்டுமே நம்பினால் சேதம் நமக்குத் தான்.
உடல் எடை குறைப்புக்கு மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும்.
தினசரி கலோரி அளவுகளை குறைக்க வேண்டும்.
இனிப்பு சுவை கொண்டவற்றை நிறுத்த வேண்டும்.
புரதம் + ஆரோக்கிய கொழுப்பை சேர்க்க வேண்டும்.
நடைப்பயிற்சி + நல்ல உறக்கம்.
இவற்றால் உடல் எடை குறையும்.
ஆனால் இதையும் வல்லுனர் கண்காணிப்பில் செய்வது தான் உங்களுக்கு நல்லது.

யூடியூப் இண்ஸ்டா முகநூலில் இயங்கும் பிறர்மதி மீது தாக்கம் (INFLUENCERS) செலுத்துபவர்களின் கனிவான கவனத்துக்கு மருத்துவம் சார்ந்த தகவல்கள் குறிப்பாக ஆபத்தான மருந்துகள் குறித்து தகவல் அளிக்கும் போது அதை பொதுமக்கள் எளிதில் எந்த மருத்துவ அறிவுரையும் இல்லாமல் உட்கொள்ளுமாறு பரிந்துரை செய்யக் கூடாது.
துறை சார்ந்த வல்லுனரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

அன்பிற்குரிய சமூக ஊடக வாசிகளின் கனிவான கவனத்திற்கு

யூடியூப் பாருங்கள்
இண்ஸ்டா பாருங்கள்
அனைத்தையும் படியுங்கள் கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் உங்களின் உடல் உயிர் விஷயத்தில் ஒரு முயற்சி செய்யும் முன்
துறைசார்ந்த மருத்துவ வல்லுனரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள்.

விழித்துக் கொள்ளுங்கள்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

 

—  Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.