அங்குசம் பார்வையில் ‘ஜீப்ரா’ திரைவிமர்சனம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ் சினிமாவை மிரட்டிய… ‘ஜீப்ரா’ | ஜில்லுன்னு சினிமா #zebra #moviereview

 

 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

யாரிப்பு : ’ஓல்டு டவுண் பிக்சர்ஸ்’ & பத்மஜா பிலிம்ஸ்’ எஸ்.என். ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம். டைரக்‌ஷன் :  ஈஷ்வர் கார்த்திக். நடிகர்—நடிகைகள் : சத்யதேவ், டாலி தனஞ்செயா, சத்யராஜ், பிரியா பவானிசங்கர், சுனில் வர்மா, ‘பிதாமகன்’ மகாதேவன், ‘கே.ஜி.எஃப்.’ ராம், சத்யா அக்கலா, ஜெனிஃபர். ஒளிப்பதிவு : சத்ய பொன்மார், இசை : ரவி பஸ்ரூர், எடிட்டிங் : அனில் கிரிஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : கணேஷ்குமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : இந்துலேகா, பி.ஆர்.ஓ. சதீஷ் [ எய்ம் ].

இந்த வாரம் தமிழில் ரிலீசான படங்களில் ‘பணி’ மலையாள இறக்குமதி என்றால் இந்த ‘ஜீப்ரா’ தெலுங்கு இறக்குமதி. இதுவும் நல்ல தமிழில்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஜீப்ரா‘இனிமே இந்தியாவில் ஒரு ஹர்ஷத் மேத்தா கூட உருவாகக்கூடாது” டைட்டில் போடுவதற்கு முன்பே இந்த டயலாக் வருவதால், படம் பேங்க் கொள்ளையர்களைப் பற்றி, பேங்கிலேயே வேலைபார்த்தபடி கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றிய கதையாகத் தான் இருக்கும், அதுவும் பக்கா எண்டெர்டெய்மெண்டாக இருக்கும் என நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தோம். நமது நம்பிக்கை கடைசி வரை வீண் போகவில்லை.

ஹீரோ சத்யதேவ் ஒரு வங்கியில் வேலை பார்க்கிறார். அம்மாவின் ஆசைப்படி இஎம்.ஐ.யில் ஒரு பிளாட் வாங்கும் வேலைகளில் இறங்குகிறார். இன்னொரு வங்கியில் வேலை பார்க்கும் பிரியா பவானிசங்கர் தான் சத்யதேவ்வின் லவ்வர். இவர் வேலை பார்க்கும் வங்கியில் ஒரே ஒரு நம்பர் மாறியதால், ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து தவறுதலாக இன்னொருவரின் வங்கிக் கணக்கிற்கு நான்கு லட்ச ரூபாய் போய்விடுகிறது.

ஜீப்ராஅந்தப் பார்ட்டியோ நான்கு லட்சத்தை உடனே எடுத்துவிட்டு, போனையும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிடுகிறார். நான்கு லட்ச ரூபாயை பறிகொடுத்தவரோ, ப்ரியாவை நெருக்குகிறார். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க சில திருட்டு ஐடியாக்களைக் கொடுத்து ஒரு மணி நேரத்தில் அந்த நான்கு லட்ச ரூபாயை ரெக்கவர் பண்ணுகிறார் சத்யதேவ்.

இன்னொரு திருட்டு வேலை பண்ணும் போது, வில்லன் டாலி தனஞ்செயாவின் அக்கவுண்டிலிருந்து ஐந்து கோடி ரூபாயை லப்பக்கிவிடுகிறார் சத்யதேவ். இதனால் ஆத்திரமாகும் டாலி, சத்யதேவை துரத்துகிறார். இன்னொரு பக்கம் சுனில் வர்மா [ விஜய் மல்லய்யா கெட்டப் ] டாலி தனஞ்செயாவைத் துரத்துகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதெல்லாம் ஏன் நடக்குது ?  எப்படி நடக்குது ? இதன் தொடர்ச்சியாக எந்தெந்த வகைகளிலெல்லாம் வங்கிகளில் தில்லுமுல்லு நடக்கிறது? என்பதை அக்குவேறு ஆணிவேராக கழட்டி மாட்டி பின்னிப் பெடெலெடுத்துவிட்டார் டைரக்டர். அதுவும் பாமர ரசிகனுக்குக் கூட எளிதாகப் புரியும் வகையில் விளக்கி, திரைக்கதையை க்ளைமாக்ஸ் வரை பரபரப்பாக கொண்டு அசத்திவிட்டார் என்றே சொல்லலாம்.

ஜீப்ரா’ ஹீரோ சத்யதேவ் செம ஸ்மார்ட் கிரிமினலாக வசீகரிக்கிறார். பிரியா பவானி சங்கரும் சும்மா பளிச்சுன்னு இருக்கார், நடிப்பிலும் அசத்திருக்கார்.   பாபா என்ற கேரக்டரில் நம்ம சத்யராஜும் பட்டையைக் கிளப்பிவிட்டார். கிரிமினல் சத்யதேவ்வுக்கு கிரிமினல் ரூட்டில் உதவும் பக்கா கிரிமினலாக மனுசன் மனசை அள்ளிட்டார்.

விஜய் மல்லய்யாவையும் நம்ம மதுரை ரவுடி வரிச்சூர் செல்வத்தையும் மிக்ஸ் பண்ணுனா,  அதான் சுனில் வர்மா. ஒரிஜினல் விஜய் மல்லய்யா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை வாங்கினது மாதிரி, இதில் சுனில் பட்டையக் கிளப்பியிருக்கார்.

ஜீப்ரா’ ‘ஜீப்ராவின்’ ஹீரோ என்றால் டாலி தனஞ்செயா தான். வில்லத்தனத்தில் மிரட்டியவர், க்ளைமாக்ஸில் முதல்வரையே கதிகலங்க வைக்கிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கேமராமேன் சத்ய பொன்மாரும் மியூசிக் டைரக்டர் ரவி பஸ்ரூரும் ‘ஜீப்ரா’வை டாப்லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வரும் ஆறு நிமிட ஃபைட் சீன் தான் கடுப்பைக் கிளப்புகிறதே தவிர, ஒட்டு மொத்த ‘ஜீப்ரா’வும் “வர்ரே…வா…

 

–மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.