அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ் சினிமா ஹீரோக்கள் ரிஜெக்ட் பண்ணிய கதை! –‘ஜீப்ரா’ சீக்ரெட்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட சினிமாவின் டாலி தனஞ்செயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் வெளியானபடம்  ‘ ஜீப்ரா’. ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ந்த ‘ஜீப்ரா’ குழுவினர் நவம்பர் 25-ஆம் தேதி சென்னையில்  மீடியாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில் முதலில் பேசிய

தயாரிப்பாளர் தினேஷ்,

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழர்கள் தான்.இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில்  வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம்.

இந்தியாவின் நல்ல இயக்குநராகும்  திறமை அவரிடம் இருக்கிறது. நீங்கள் அனைவருமேபாராட்டினீர்கள். உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.  மிகப்பெரிய பட்ஜெட்டில் தரலாம் என நம்பிக்கை வந்துள்ளது.  அந்த நம்பிக்கை தந்ததற்கு அனைவருக்கும் நன்றி”.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

'ஜீப்ரா' சீக்ரெட்
‘ஜீப்ரா’ சீக்ரெட்

விநியோகஸ்தர் ரகுபதி,

“ஜீப்ரா டிரெய்லர் வந்தவுடனே இந்தப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். தீபாவளிக்கு வரவேண்டிய படத்தை, தள்ளிப் போட்டோம் . லக்கி பாஸ்கர் சாயலில் இருந்தாலும், விமர்சகர்கள் கதை புரிந்து பாராட்டுவார்கள் என நம்பினோம். அது போல் உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குநர் மிக அருமையாகப் படத்தைத் தந்துள்ளார்”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எடிட்டர் அனில் கிரிஷ் ,

“15 வருட கனவு நனவாகியுள்ளது. 15 வருடம் முன்பு கோயம்புத்தூரிலிருந்து வந்து நானாக வளர்ந்து இந்தப்படத்தில் எடிட்டராக பணியாற்றியுள்ளேன். நான் யாரிடமும் வேலை செய்ததில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்னதாக ஷார்ட் ஃபிலிம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தை அடைந்துள்ளேன். 2018 ல் ஈஸ்வரை மீட் செய்தேன். அவருடனான டிராவல் மறக்க முடியாதது. பென்குவின் படத்தை என்னை நம்பி தந்தார். இப்போது ஜீப்ரா. பாலா சார், தினேஷ் சார் எங்களுக்கு ஆதரவு தந்ததால் தான் இந்தப்படம் உருவானது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த ஈஸ்வருக்கு  நன்றி”.

டப்பிங் ரைட்டர்  அசோக்…  “இந்தப்படத்தை பார்தபோது  லக்கி பாஸ்கர் வரவில்லை. ஆனால் ஜீப்ரா மிகவும் புதிதாக இருந்தது. கதாபாத்திரங்கள் அத்தனையும் அழுத்தமாகச் சிறப்பாக இருந்தது. அதைத் தமிழில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன்”.

திரைக்கதை எழுத்தாளர் யுவா,

“ஒரு சின்னப்படமாகத் தான் இதைத் தொடங்கினோம். பெரிய படமாக ஆக்கிய பாலா சார், ஈஷ்வர் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. இப்படத்திற்கு பெரிய அளவில் ஆதரவு தந்து வெற்றி பெற வைத்த  உங்களுக்கு நன்றி”.

இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்,

“சென்னையில்  தான் என் பயணம் தொடங்கியது. இங்கு நான் மற்ற படங்களின் விழாக்களை வேடிக்கை பார்த்துள்ளேன். என் முதல் படம் பென்குவின் கொஞ்சம் தவறிவிட்டது. அதன் முழுப்பொறுப்பும் எனக்குத் தான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத் திருத்திக்கொண்டு தான், இந்தக்கதையைத் துவங்கினோம்.  பாலா சார், தினேஷ் சார் இருவரிடம் இந்தக் கதையை சொன்ன போது, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன், உடனே செக் தந்தார்கள். எனக்குக் கனவு மாதிரி இருந்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நான் திண்டுக்கல்காரன் தான். இந்தப்படம் இங்கு தான் செய்வதாக இருந்தது. ஆனால் அப்போது ஃபினான்ஸியலாக முடியவில்லை. அதனால் தெலுங்குக்குப் போனது.   அங்கிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செய்தோம். தியேட்டரில் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி உங்களால் தான். உங்கள் அனைவருக்கும் நன்றி”.

நடிகர் சத்ய தேவ்…

“தமிழ்நாட்டுடன் எனக்கு ஸ்பெஷல் கனக்சன் இருக்கிறது. தமிழ்ப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்ப் படம் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஜீப்ரா மூலம் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. உங்கள் பாராட்டுக்கள் பெரிய ஊக்கம் தந்துள்ளது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.  சீக்கிரம் தமிழ் கத்துக்கிறேன்.

நடிகர் சத்ய தேவ்
நடிகர் சத்ய தேவ்

இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இயக்குநர் ஈஸ்வர் இந்தப்படத்திற்கு 800 பக்க திரைக்கதை எழுதியிருந்தார். அவர் மியூசிக், ரசிகர்கள் ரியாக்சன் முதற்கொண்டு டீடெயிலாக  எழுதியிருந்தார். அவர் எழுதியது அப்படியே தியேட்டரில் நடந்தது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார்.  அனில்  எடிட்டிங் குறித்து தனியாகப் பாராட்டுகிறார்கள். ரவி பஸ்ரூர் மியூசிக் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி”

தயாரிப்பாளர் பால சுந்தரம்,

“இது தான் என் முதல் மேடை. Old Town Pictures க்கு இதை முதல் படமாகச் செய்ய நினைத்தது ஏனென்றால், நான் கடலூர்க்காரன், ஓல்டவுன் எங்கள் ஊர். அதை எங்காவது கொண்டு வந்துவிடுவோம் என்று தான் இந்த டைட்டில். ஈஸ்வர் இந்தக்கதை சொன்னவுடன் கண்டிப்பாக இதை நாம் செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. தினேஷ் தான் புரொடக்சனுக்கு என்னை இழுத்து விட்டார். இந்தக்கதை கேட்டவுடன், இதை எப்படியாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைத்தோம்.

தமிழ் மலையாளம் எல்லாம் சேர்த்துத் தான் செய்ய நினைத்தோம். ப்ளான் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே நிறையப் பிரச்சனை. இந்தக்கதையைத் தமிழில் எல்லா நடிகர்களிடமும் சொன்னோம்.  நிறைய கரெக்சன் சொல்லி ரிஜெக்ட் பண்ணிவிட்டார்கள். எனவே இந்தக்கதையில் ஒரு வரி கூட மாற்றக்கூடாது அதை ஒத்துக்கொள்பவர்கள் தான் நடிகர்கள் என முடிவு செய்தோம்.

சத்ய தேவ் அவ்வளவு உற்சாகமாக வேலை செய்தார். ஈஸ்வர் மாதிரி ஒரு உழைப்பாளி இருக்க முடியாது. அசுரத்தனமாக உழைத்தார். அனில் அற்புதமான எடிட்டர்.  பெரிய தடைகளைத் தாண்டி இந்தப்படத்தைச் செய்துள்ளோம்.  எங்கள் டீமில் எல்லோருக்கும் அடையாளமாக இருந்தது ரவி பஸ்ரூர்  மற்றும் சத்யராஜ் சார் மட்டும் தான். இப்போது எங்கள் பெயரும் தெரியுமளவு படத்தைத் தந்துள்ளோம்.

இந்தக்கதை தந்த ஈஸ்வருக்கு நன்றி. சத்ய தேவ், தனஞ்செயா தந்த புரமோசன், உழைப்பு, வேறெந்த நடிகரும் தர மாட்டார்கள். அவ்வளவு உழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி. இக்கதையில் உழைத்த யுவாவிற்கு நன்றி. எங்களுக்கு முழு ஆதரவாக நின்ற சத்யராஜ் சாருக்கு நன்றி. எங்களுக்கு ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி”.

நடிகர் சத்யராஜ்,

“நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை.

நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்

இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப்பிங் பேச வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இந்த டீமே அற்புதமான டீம்.  இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார். படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி”.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.