பேஸ்புக் பேச்சியம்மாள் 12 லட்சம் கைவரிசை ஈரோடு தொழிலதிபரின் பேராசை பணம் போச்சே !
பேஸ்புக் பேச்சியம்மாள் 12 லட்சம் கைவரிசை ஈரோடு தொழிலதிபரின் பேராசை பணம் போச்சே !
ஈரோடு மாவட்டம் முடக்கன்குறிச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (41) இவர் பனியன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது, இவர் facebook பயன்பாட்டில் கிங்மேக்கராக வளம் வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் பகுதியில் சேர்ந்த 31 வயதான faceBook பேச்சியம்மாளின் போட்டோவை பார்த்து தொழில் அதிபர் ரமேஷ் ஆசைப்பட்டு பேச்சியம்மாளுக்கு நண்பர் ஆவதற்கான அழைப்பு கொடுத்து இருவரும் நண்பர்களாகி ரமேஷிடம் எவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது என்ன தொழில் செய்து வருகிறார்.
என்ற போன்ற விவரங்களை கேட்டுக்கொண்ட facebook பேச்சியம்மாள் தன்னை சிவகாசி மத்திய கூட்டுறவு வங்கியின் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிவதாகவும், இங்கு பழைய தங்க நகைகள் ஏலத்திற்கு வருவதாகவும், சுமார் (380) கிராம் இருப்பதாகவும், அதுவும் பாதி விலையில் கிடைக்கும் என ரமேஷிடம் தெரிவித்து புகைப்படங்களை whatsapp மூலம் அனுப்பி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு உள்ளார்.
facebook பேச்சியம்மாள் இதை நம்பிய ரமேஷ் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பல்வேறு பரிவர்த்தனை மூலம், 11 லட்சம் ரூபாய் பணத்தை facebook பேச்சியம்மாள் வங்கி கணக்கில் போட்டு வந்துள்ளார்.
ரமேஷ் மீதம் உள்ள தொகையை நேரில் கொண்டு வந்து நகையை பெற்றுக் கொள்வதாக தெரிவித்து ஈரோட்டில் இருந்து சிவகாசி பேருந்து நிலையம் வந்து இறங்கிய ரமேஷ் facebook பேச்சியம்மாளிடம் ரூபாய் ஒரு லட்சத்து 58 ஆயிரத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார், நீங்கள் என்னுடன் வர வேண்டாம், நகையை நான் திருப்பி விட்டு தங்களிடம் வந்து கொடுக்கிறேன் என தெரிவித்து சென்றுள்ளார், பின்னர் பல மணி நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்தார் ரமேஷ் facebook பேச்சியம்மாளின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு உள்ளார்.
கைபேசி சுவிட்ச் ஆப் என வந்துள்ளது, பின்பு தான் தெரிய வந்தது தன்னிடம் பணம் வாங்கியது மோசடி பேரொளி என்று உடனடியாக பதறிக்கொண்டு சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட ரமேஷ் facebook பேச்சியம்மாளை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் ஏலத்தில் வராத நகையா அல்லது உடன் இருப்பவர்களை கூட நம்பாமல் எங்கோ அடையாளம் தெரியாத பெண் இணையம் மூலம் பழக்கமாகி தங்க நகை மிகக் குறைவான விலை ஏலத்திற்கு வருவதாக கூறி பல கிலோமீட்டர் தாண்டி பணத்தை எப்படி நம்பி அனுப்பினார் ரமேஷ்? அல்லது பேஸ்புக் பேச்சியம்மாள் அழகில் மயங்கினாரா ரமேஷ் ?
எது எப்படியோ திட்டம் போட்டு ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை இது போன்ற எத்தனை ரமேஷ் பாதிக்கப்படுவார்களோ ?
-மாரீஸ்வரன்