காக்கி சீருடைக்குள் மதவெறி : காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம்

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

காக்கி சீருடைக்குள் மதவெறி :
காவல் ஆய்வாளர்
பணி இடைநீக்கம்

சிறுபான்மையினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசி வாட்ஸ்ஆப் குழுவில் ஆடியோ வெளியிட்ட ‘மத வெறி’ பிடித்த சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கான ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் கிறிஸ்டோபர் என்ற ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் புனித மேரி மாதா கோவில் குறித்த பாடல்களை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பகிர்ந்துள்ளார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

அப்போது, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளரான ராஜேந்திரன் தலையிட்டு, அப் பாடல்கள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

4

‘இந்துக்களான நாங்கள் 80 சதவீதம், மீதமுள்ள கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வெறும் 20 சதவீதம் மட்டுமே’ என கேலி செய்யும் வகையில் மெசேஜ் செய்துள்ளார்.

மேலும், ‘ பாபர் மசூதியை இடித்து இந்து கோயிலை கட்டியவர்கள் நாங்கள். எங்களுடைய மெஜாரிட்டி தான் அதிகம். இங்கு ராம ராஜ்ஜியம் நடக்கும். முடிந்தால் அதை தடுத்துப் பாருங்கள்.


முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் கிறிஸ்தவர்கள் வேறு எங்கேயாவதும் சென்றுவிட வேண்டியதுதானே. இனி கிறிஸ்தவர்கள் பாடல் மற்றும் முஸ்லிம் பாடல் என எதையும் இங்கு (வாட்ஸ்ஆப் குழு) பதிவிடக் கூடாது’ என தான் ஒரு அரசு ஊழியர் என்பதையும் மறந்து மதவெறியுடன் தனது கருத்துக்களை ஆடியோவாக பதிவிட்டார் ஆய்வாளர் ராஜேந்திரன்.

அவரது இந்த மதவெறிப் பேச்சு அடங்கிய ஆடியோ வைரலானது.

இதையடுத்து, அவரது சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவை அக்குழுவில் இருந்த நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மதவெறி கொண்ட காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் (தெற்கு) என்.எம்.மயில்வானகணன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

5
Leave A Reply

Your email address will not be published.