அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சொட்டு மருந்து குடித்த 13 நாள் குழந்தை பரிதாப பலி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வல்லரசன் மனைவி ஜோதிகா. இவர்களுக்கு பிறந்த 13 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு சளித் தொந்தரவு இருந்ததாகவும்,

இதையடுத்து வீரமச்சான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையைக் கொண்டு சென்று காண்பித்ததில் அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் சொட்டு மருந்தை பரிந்துரைத்ததாகவும், அரசு மருத்துவமனையில் சொட்டு மருந்து இல்லாததால் , மருத்துவரின் பரிந்துரை சீட்டை துறையூரில் உள்ள மெடிக்கலில் காண்பித்து மருந்து வாங்கியுள்ளனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

நேற்று இரவு  தாய் ஜோதிகா தனது குழந்தைக்கு மூக்கில் சொட்டு மருந்தை கொடுத்து தூங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. சொட்டுமருந்து கொடுத்தில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளி இறந்துவிட்டது. குழந்தையின் இறப்பிற்கு அரசு மருத்துவர் பரிந்துரைத்த சொட்டுமருந்தா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.