வெண்டிலேட்டர் இல்லாததால் உயிரிழந்த திருச்சி பெண் எஸ்.ஐ..
வெண்டிலேட்டர் இல்லாததால் உயிரிழந்த திருச்சி பெண் எஸ்.ஐ..
கொரானா தொற்றால் பாதித்த திருச்சி பெண் எஸ்.ஐ வெண்டிலேட்டர் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது -43), இவர் திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணியில் பணியாற்றி வந்தார். இவருக்கு 9 மற்றும் 5 வயதில் மகன்கள் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.ஐ – யாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்த நிலையில் கடந்த வாரம் காவல்துறையில் அனைவருக்கும் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ராஜேஸ்வரிக்கு கொரானா நெகட்டிவ் என வந்தது. ஆனாலும் அவருக்கு இடைவிடாமல் இருமல் சளித் தொந்தரவு இருந்து வந்ததால் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது கொரானா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் வீட்டிலேயே தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று 27/05/2021 திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு எஸ்.ஐ ராஜேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் உடனடியாக வென்டிலேட்டர் வைக்க வேண்டுமென்று இங்கு வெண்டிலேட்டர் வசதி தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.
அதனால் தொடர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் ராஜேஸ்வரியை மதுரைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல குடும்பத்தார் முடிவு செய்து தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே எஸ்.ஐ ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இச்சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
–ஜித்தன்