திருச்சி ஐ.ஜி சரகத்தில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 நபர்களை கைது செய்தது என்.ஐ.ஏ..
திருச்சி ஐ.ஜி சரகத்தில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 நபர்களை கைது செய்தது என்.ஐ.ஏ..
திருச்சி மத்திய மண்டல ஐஜி சரகத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு என்.ஐ.ஏ அமைப்பினர் 2 நபர்களை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம்
நீடூர் அருகே மசரதுள் பக்ரா எனும் கோழி கடையில் வேலை பார்த்து வந்த கோயம்புத்தூரை சேர்ந்த முகம்மது ஆசிக் s/o அப்துல் ரகுமான் எனும் நபரை நேற்று 27/05/2021 இரவு தமிழ்நாடு தேசிய புலனாய்வு அமைப்பு சேர்ந்த போலீசார் கைது செய்தனர்.

அதில் முகமது ஆசிக் மீது 2018 இல் அவர் மீது கோயம்புத்தூரில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக வழக்கு இருந்து வந்த நிலையில் திடீரென தலைமறைவாக இருந்த முகமது ஆஷிக் -கை தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடிவந்த நிலையில் சமீபத்தில் மயிலாடுதுறையில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
மேலும் அங்குசம் செய்திக்காக மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் அவர்களிடம் பேசியபோது…

2018 இல் மேற்பட்ட நபர்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, இப்போது பூனமல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது அதனடிப்படையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட தனிப்படை போலீசார் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட முகமது ஆஷிக்குடன் சுற்றித்திரிந்த மற்றொரு சந்தேகிக்கும் வண்ணம் உள்ள நபரையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து அழைத்து சென்றனர். என்று கூறினார்.
–ஜித்தன்