திருச்சியில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியுடன் திரிந்த நபர்கள் கைது..
திருச்சியில் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியுடன் திரிந்த நபர்கள் கைது..
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு நபர்கள் நாட்டு துப்பாக்கியுடன் திரிந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பூலாங்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த சரண்ராஜ், சக்திவேல் ஆகிய இருவரும் லைசன்ஸ் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சாலையில் சுற்றி வந்துள்ளனர்.
அந்த இரண்டு பேரையும் போலீசார் பிடித்து அவர்களிடமிருந்த துப்பாக்கியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
–ஜித்தன்