பாமக பிரமுகரை கொல்ல “ஸ்கெட்ச்” போட்ட கூலிப்படை.. வெடிகுண்டுகளுடன் துப்பறிந்து தூக்கிய தனிப்படை போலீசார்..
பாமக பிரமுகரை கொல்ல “ஸ்கெட்ச்” போட்ட கூலிப்படை.. வெடிகுண்டுகளுடன் துப்பறிந்து தூக்கிய தனிப்படை போலீசார்..
தஞ்சை அருகே பாமக பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படையை சேர்ந்த 4 நபர்களை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மேலமருத்துவக்குடியை சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்டத்தில் முக்கிய மூத்த அரசியல் பிரமுகர்களின் ஒருவர், தற்போது வன்னியர் சங்க மாநிலத் துணைத்தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று 13/06/2021 திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகன் தலைமையிலான போலீசார் ம.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அவரை வெளியே எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல வேண்டாம் உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது சமூகவிரோதிகள் உங்களை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார்கள். என்று சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து தகவல் வெளியாகியது அடுத்து அதில் சிலரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். என்று கூறி நேற்று முதல் இன்று 14/06/2021 வரை சம்பந்தப்பட்ட மருத்துவகுடி, ஆடுதுறை, போன்ற பகுதிகளில் செக்போஸ்ட் உடன் பலத்த போலீசார் குவிக்கப்பட்டு அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி ம.க.ஸ்டாளினிடம் நாம் பேசியபோது…
கடந்த 2015ஆம் ஆண்டு எனது தம்பி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம.க.ராஜா என்பவரை சில கூலிப்படை கும்பல் கொலை செய்தது.
அதுதொடர்பாக சில சமூக விரோதிகள் எங்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் என்னையும் கொலை செய்ய திட்டமிட்டு இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது கூட என்னை கொலை செய்ய ஒரு கூலிப்படை டீம் நாட்டு வெடிகுண்டுகளுடன் துப்பாக்கிகளுடன் சுற்றி வந்துள்ளது அதனை ரகசியமாக கண்டறிந்த தனிப்படை போலீசார் நேற்று 13/06/2021 மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் செந்தமிழ்ச்செல்வன் மேலும் 2 பேரை ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
இதில் மகேஸ்வரன் எனும் நபர் ஏற்கனவே எனது தம்பியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கிற லாலி மணிகண்டன் என்பவரது அண்ணன் என்றும், அந்நபர் மூலம்தான் என்னை கொலை செய்ய சில கூலிப்படைகள் சுற்றி வருவதாக போலீசார் தரப்பில் கூறிவருகின்றனர் என்று கூறினார்.
தென் மண்டலத்திற்கு அடுத்து மத்திய மண்டலம் கொலைக்கும் கொள்ளைக்கும் பேரு போனதாக இருந்து வருகிறது. காரணம் கூலிப்படையின் கூடாரமாக தஞ்சை மாவட்ட கும்பகோணம் மற்றும் இதர சில பகுதிகள் இருந்து வருவது பொதுமக்களை பதட்டத்துடனே இருக்க வைக்கிறது. இது போன்ற சமூக விரோதிகளை தக்க சமயத்தில் காவல்துறை களை எடுத்தால் மட்டுமே குற்ற சம்பவங்கள் குறையும் பொதுமக்கள் நகரத்திற்குள் நிம்மதியாக வளம் வர முடியும்..
தக்க சமயத்தில் கண்டு களை எடுப்பாரா மத்திய மண்டல ஐ.ஜி.. என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
–ஜித்தன்