திருச்சி வாலிபருக்கு கொலை மிரட்டல் விட்ட வழக்கு.. சீமான் தம்பிகள் 4 பேர் கைது..
திருச்சி வாலிபருக்கு கொலை மிரட்டல் விட்ட வழக்கு.. சீமான் தம்பிகள் 4 பேர் கைது..
திருச்சி கார் நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சியில் இயங்கி வரும் சமர் கார் ஸ்பா நிறுவன ஊழியர் சமீபத்தில் விடுதலைப்புலி பிரபாகரன் தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பேசி வெளியிட்டிருந்தார். அதில் பிரபாகரனை இழிவு படுத்தும் விதமாக பதிவுகள் இருந்துள்ளது.
இதனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருச்சி வினோத், சரவணன், மகிலன் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கார் நிறுவன ஊழியரை நேரில் சென்று வீடியோ வெளியிட்ட ஊழியர் தான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கார் நிறுவன ஊழியர் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மேற்கண்ட நான்கு பேரும் என்னை அடித்து மன்னிப்பு கேட்கும்படியும் இல்லையெனில் அடித்துக் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதன் அடிப்படையில் இன்று 11/06/2021 மாலை 4.30 மணி அளவில் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத், சரவணன், மகிழன் ஆகியோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
–ஜித்தன்