டியூட்டிக்கு லேட்டா வந்த போலீஸ்.. இது தான் பனிஷ்மென்ட்.. அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர்..
டியூட்டிக்கு லேட்டா வந்த போலீஸ்.. இது தான் பனிஷ்மென்ட்.. அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர்..
திருச்சி ரயில்வே சரகத்திற்கு உட்பட்ட இருப்புப்பாதை காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர் ஜாக்குலின் இன்று 11/06/2021 காலை திடீரென திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதில் காலை டியூட்டிக்கு வரும் அனைத்து காவலர்களும் ரோல்கால் அணிவகுப்பில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ரயில் நிலையத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளையும் மற்றும் அன்றைய காவல் நிலைய நிகழ்வுகளை சக காவலர்களுக்கு தெரிவிக்கும் விதமாக இந்த ரோல்கால் என்பது தினமும் நடைபெறும்..
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தமிழக முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு பணியில் உள்ள அனைத்து காவலர்களையும் விழிப்பாக எச்சரிக்கையாக இருக்க தெரிவிப்பதற்காக திடீர் விசிட் ஆக தனது கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மத்திய இருப்புபதை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இதில் இன்ஸ்பெக்டர் திடீர் ஆய்வுக்கு வருவது தெரியாமல் வழக்கம்போல் தாமதமாக ரோல்கால் நிகழ்வுக்கு வரக்கூடிய சில காவலர்கள் வர கோபமடைந்த இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டு விட்டாராம்..
இன்ஸ்பெக்டரின் இந்த அதிரடி செயல் ரயில் நிலையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்..
–ஜித்தன்