திருச்சி நர்சிங் மாணவியை வலைவிரித்து தேடும் தனிப்படை போலீஸ்…
திருச்சி நர்சிங் மாணவியை வலைவிரித்து தேடும் தனிப்படை போலீஸ்…
திருச்சி நர்சிங் மாணவியை 4 நாட்களாக தனிப்படை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி கீழ சிந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரவடிவேலு- சாந்தி இவர்களது இளைய மகள் துர்கா தேவி (18) என்பவர் உறையூர் பகுதியில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் வெகுநேரமாகியும் தனது வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் பதட்டமடைந்த துர்காதேவியின் பெற்றோர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அதன்படி விசாரணை தொடங்கிய போலீசார் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது.. சிறுமி பணி முடிந்து வெளியே வரும் வீடியோ மட்டும் உள்ள நிலையில் அவர் எங்கு சென்றுள்ளார் என்கிற தகவல் இதுவரை கிடைக்காததால் பெரும் பதட்டம் நிலவியுள்ளது.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் சிறுமியை குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
–ஜித்தன்