திருச்சியில் மாணவிகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பிரபல கல்லூரி நிர்வாகம்..
திருச்சியில் மாணவிகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பிரபல கல்லூரி நிர்வாகம்..
திருச்சி மலைகோட்டை மாநகரில் இயங்கி வரும் பிரபல தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில், செமஸ்டர் எக்ஸாம் என்கின்ற பெயரில் மாணவிகளிடம் பணம் பறித்து கொண்டிருப்பதாக அந்தக் கல்லூரி மீது குற்றச்சாட்டு எழும்பி வருகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் செமஸ்டர் எக்ஸாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இந்நிலையில் ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களிடம் வீட்டிலிருந்து தேர்வு எழுதி தேர்வுத் தாளை கல்லூரியில் வந்து கொடுக்குமாறு செய்து வருகின்றனர். அல்லது புகைப்படம் எடுத்து வாட்ச்ஆப்பில் அனுப்ப சொல்கிறார்கள்.
ஆனால் மலைகோட்டை மாநகரில் இயங்கி வரும் மகளிர் கல்லூரி ஒன்றில் மாணவிகளை தேர்வு எழுதி தேர்வுத் தாளை ஸ்கேன் செய்து பிடிஎப் முறையில் அனுப்புமாறு கூறுகின்றனர். இதில் மாணவிகள் ஸ்கேன் செய்து அனுப்பும்போது அக்கல்லூரி ஆசிரியர்களுக்கு எழுத்தின் நிறம் குறைவாக தெரிகிறது, உங்கள் பேப்பரின் மெயில் வரவே இல்லை, உங்கள் பேப்பரின் File ஓப்பன் ஆக வில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நன்றாக படிக்க கூடிய மாணவிகளையும் தேர்ச்சி பெறாமல் மறுதேர்வு பணம் கட்டி எழுத கூறுகின்றனர். மறு தேர்வு எழுதியவுடன் அனைவருக்கு மதிப்பெண் போட்டு விடுகிறார்கள்.
இதுபோல ஒவ்வொரு துறையிலும் குறைந்தது 40 மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் செய்து அவர்களிடம் மறு தேர்வு எழுத பணம் கட்டுமாறு வலியுறுத்திகின்றனர். அப்படி இரண்டாம் கட்டமாக தேர்வு எழுதி அனுப்பும் மாணவிகளை தேர்ச்சி அடைய வைக்கின்றனர் அக்கல்லூரி நிர்வாகம்.
திருச்சியில் மாணவிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் விதமாக கல்லூரி நிர்வாகம் இயங்கி வருவது பெற்றோரிடையே வேதனை அளித்து வருகிறது.
–ஜித்தன்