திருச்சி காவல் நிலையத்தில் தேர்தல் மொய்கவர் பட்டுவாடா..
திருச்சி காவல் நிலையத்தில் தேர்தல் மொய்கவர் பட்டுவாடா..
திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட மத்திய காவல் நிலையம் ஒன்றில், தேர்தல் சமயங்களில் அரசியல் புள்ளிகளால் கொடுக்கப்பட்ட மொய்கவர் தற்போது கொடுக்கப்பட்டு வருவதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாநகர பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் நிலைகளான தில்லைநகர் காவல் நிலையம், ஜி ஹெச் காவல் நிலையம், கண்டோன்மென்ட் காவல் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் தில்லைநகர், ஜி.எச் காவல் நிலையங்களில் பணியாற்றும் ஒரு சில காக்கிகள் சிக்கி உயர் அதிகாரிகளால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மத்தியிலுள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் தேர்தல் சமயங்களில் கொடுக்கப்பட்ட பணத்தினை மறைத்து வைத்திருந்த நிலையில், காவலர்களில் சிலர் தங்களுக்கு கொடுத்த பணத்தினை திருப்பி கொடுக்குமாறு பிரளயத்தை கிளப்ப அந்த “மங்கலக் கீர்த்தியான” அதிகாரி பணத்தினை மீதமுள்ள காவலர் ரூபாய் 2000 வீதம் அனைவருக்கும் கொடுத்துள்ளாராம்…
தேர்தல் சமயங்களில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தற்போது அந்த காவல் நிலையத்தில் உலா வந்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
–ஜித்தன்