திருச்சி ரவுடி ஆடியோ சாமியாருக்கு 2-வது முறையாக ஜாமீன் தள்ளுபடி!
திருச்சி ரவுடி ஆடியோ சாமியாருக்கு 2-வது முறையாக ஜாமீன் தள்ளுபடி!
திருச்சியில் சமீபத்தில் ரவுடிகளின் பெயர்களைக் கொண்டும், அரசியல் முக்கிய புள்ளிகளின் பெயர்களை பயன்படுத்தி திருச்சி சோமரசம்பேட்டை தேஜா சுவாமி மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகிய இருவர் பேசிக்கொண்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் ரவுடி சாமியார் தனக்குத் தெரிந்த அதிகாரிகள் மூலம் என்கவுண்டர் லிஸ்டில் உள்ள ரவுடிகளை காப்பாற்ற போவதாக கூறி பேசிய ஆடியோ காவல்துறை வட்டாரங்களையே பதட்டமடைய வைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் வழக்கறிஞர் கார்த்தி ரவுடி தேஜாஸ் சாமியார் பிரபல ரவுடி கொட்டப்பட்டு ஜெய் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடி கொட்டப்பட்டு ஜெய்க்கு குண்டாஸ் போடப்பட்டது.
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் JM – 5 இல் நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் ஜாமின் வழக்கறிஞர் கார்த்திக்கு வழங்கப்பட்டது.
ஆனால் ரவுடி சாமியார் தேஜாஸ்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் சாமியார் சிறையிலும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டாராம். அங்குள்ள நபர்களிடமும் எனக்கு அந்த அதிகாரியை தெரியும் இவர்களை தெரியும் அவர்களை தெரியும் என்று முதற்கட்ட கற்களை எறிய தொடங்கியதால் சிறைத்துறை அதிகாரிகள் அவரை யாரிடமும் பேசவிடாமல் வைத்துள்ளார்களாம்.
–இந்திரஜித்