எம்எல்ஏ-வின் நெருக்கடியால் இடமாறி போன- திருச்சி இன்ஸ்பெக்டர்கள்.

0

எம்எல்ஏ-வின் நெருக்கடியால் இடமாறி போன- திருச்சி இன்ஸ்பெக்டர்கள்.

திருச்சி புறநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் சமீபத்தில் தங்களுக்கு வேறு காவல்நிலையங்களில் பணியமர்த்துமாறு வேண்டி உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்து மாறியுள்ளனர்..

திருச்சி சமயபுரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இருந்தவர் முத்து இவர் கடந்த மாதம் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் லோடு அழைத்துச்சென்ற லாரியை பிடித்து விசாரணை செய்ததில் சட்டத்திற்கு புறம்பாக மணல் ஏற்றுவது தெரியவந்தது அதன்பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் முத்துக்கு கோயில் நகரத்தின் எம்எல்ஏ ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு யாருடைய வண்டியின் மீது வழக்கு போட்டுருக்க, உன்னை என்ன பண்றேன் பாரு உன்னால அங்க வேலையே பார்க்க முடியாது என்று மிரட்டியுள்ளார். அதன்பேரில் என்னடா இது வம்பா போச்சே என்று தலையில் அடித்துக்கொண்டு காவல் நிலையத்தை விட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளார் இன்ஸ்பெக்டர் முத்து.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் முத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைப் போன்றே சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியில் இருந்த காவலர்களை கேலி கிண்டல் செய்து ஆபாசமாக பேசிய நபர் ஒருவரை போலீசார் பிடிக்க சென்றபோது அந்நபர் சம்பந்தப்பட்ட கோவில் நகரம் எம்எல்ஏவின் வீட்டின் அருகில் போய் மறைந்து கொண்டார். பின்னர் போலீசார் அந்நபரை பிடித்து காவல் நிலையம் சென்று வழக்கு பதிந்தனர். அப்போது காவல் ஆய்வாளர் ரமேஷ் குமாருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட கோவில் நகர எம்எல்ஏ என் வீடு கூட பாக்காம நீங்க ஒருத்தன அழைச்சிட்டு போறீங்க உங்களுக்கு எனக்கும் ஒத்துப்போகாது போலிருக்கே, உங்கள எல்லாம் மாத்தி விட்டா தான் சரியா இருப்பீங்க என்று தொலைபேசியில் பேசி விட்டு வைத்துள்ளார். மேலும் எம்எல்ஏ பேசிய சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் என்று கூறி நான்கு பேர் சம்பந்தப்பட்ட நபரை விட கூறி இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாருக்கு பிரஷர் கொடுத்துள்ளனர். ஆனால் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் போலீஸ் பூத்தில் இருந்த ஒரு காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசிய நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கோவில் நகர எம்எல்ஏ-வின் பிறந்தநாள் சமீபத்தில் நடைபெற்றது. அதற்கு சோமரசம்பேட்டை எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  அரசால் தடைசய்யப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதனை அகற்றுமாறும், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார். இதனை கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டுள்ளார் அந்த கோயில் நகர எம்எல்ஏ.

இதனால் சட்டத்தை காப்பாற்றிய அதிகாரிக்கு கிடைத்த வெகுமதி சம்பந்தப்பட்ட சோமரசம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் மாற்றப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உயர் அதிகாரிகளை நேரில் சென்று பார்த்து தனக்கு வேறு காவல் நிலையத்தில் பணியமர்த்துமாறு கேட்டுக்கொண்டு பணி மாறி சென்றுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து எம்எல்ஏவின் அட்ராசிட்டியால் இரண்டு போலீசார் தூக்கி அடிக்கப்பட்டது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தர்ஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.