பிரபல நிதி நிறுவனத்தின் பெயரில் ஆன்லைனில் கடன் தருவதாக ஆசைகாட்டி பல லட்சம் மோசடி : 2 சைபர் குற்றவாளிகள் கைது!

0

பிரபல நிதி நிறுவனத்தின் பெயரில் ஆன்லைனில் கடன் தருவதாக ஆசைகாட்டி பல லட்சம் மோசடி : 2 சைபர் குற்றவாளிகள் கைது!

கடன் தருவதாக பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு நபர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர்களின் ஆசையைத் தூண்டி அதை நம்பி தொடர்பு கொள்ளும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து நூதன முறையில் பல லட்சக்கணக்கான ரூபாய் திருடிய ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த இரண்டு ‘தில்லாலங்கடி’ நபர்களை தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/


இக் குற்றச் செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட மேலும் ஒரு குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் வசித்துவருபவர் சுரேஷ் (46).

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இவரது செல்போனுக்கு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் TATA Capital என்ற பிரபல நிதி நிறுவனத்தின் ‘லோகோ’வுடன் ஆன்லைன் மூலமாக கடன் தருவதாக கூறி ஒரு குறுஞ்செய்தி (sms) வந்துள்ளது.

ஆன்லைன் மூலமாக கடன் தரும் பொருட்டு அவரது ஆதார் கார்டு, போன் கார்டு, போட்டோ, வங்கி பரிவர்த்தனை விபரங்களை செல்போன் வாயிலாகக் கேட்டு அவர் ரூ.2,50,000 (இரண்டரை லட்சம்) வரை கடன் பெற தகுதியுடையவர் எனக்கூறி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஒரு கடன் விண்ணப்ப மனுவை அவரது வாட்ஸ்ஆப்-ல் அனுப்பியுள்ளனர்.

பின்னர், அவரது வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.25,000 இருக்க வேண்டும். அப்போதுதான் லோன் கிடைக்கும் எனக்கூறி, ஆசை வார்த்தைகள் கூறி அவரது நம்பச் செய்து அவரது ATM Card-ன் 16 digit எண், expiry date உள்ளிட்ட விபரங்களை சொல்லச் சொல்லி, இரண்டு முறை OTP வர அதையும் அக்கும்பலைச் சேர்ந்த நபர்கள் அவரிடம் கேட்டு பெற்றுக் கொண்டனர்.

சிறிது நேரத்தில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.24,955 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், அம் மோசடிக் கும்பலைச் சேர்ந்த நபரை தொடர்பு கொண்டு ‘ஏன் பணம் எடுத்தீர்கள்?’ எனக் கேட்டுள்ளார்.

ஆனால், மறுமுனையில் பேசிய நபர் அவசர அவசரமாக போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பின்னர் பலமுறை முயன்றும் அம் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ், இதுகுறித்து ஜுன் 26-ம் தேதி சைபர் க்ரைம் வெப்சைட் வாயிலாக புகார் அளித்தார். அதன் பின்னர், ஜுலை 1-ம் தேதியன்று தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்தார்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இக் குற்றச் செயலில் ஈடுபட்ட சைபர் க்ரைம் குற்றவாளிகளின் செல்போன் எண்களை கண்காணித்தபோது அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அரக்கோணத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸார் அரக்கோணம் விரைந்து ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த கார்த்திசன் (34), சுரேஷ் (34) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இவ்விருவரில், கார்த்திசன் என்பவர் நாகப்பட்டினம் மேல கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சுரேஷ் என்பவர் சென்னை வியாசர்பாடியில் உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இக்கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட சாய் (எ) கோபிகிருஷ்ணன் என்பவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இம் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரக்கோணத்தில் 2 இடங்களிலும், திருவள்ளுரில் ஒரு இடத்திலும் என மொத்தம் 3 இடங்களில் அலுவலகங்கள் அமைத்து அங்கே பெண்களை வேலைக்கு அமர்த்தி அப் பெண்கள் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதே முறையில் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் பேசியும் நூற்றுக்கணக்கான நபர்களை ஏமாற்றி லட்சக் கணக்கில் பண மோசடி செய்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அம் மூன்று அலுவலகங்களையும் போலீஸார் ரெய்டு நடத்தி மூடச் செய்தனர்.

இக் கும்பலிடமிருந்து 42 செல்போன்கள், 37 செல்போன் சார்ஜர்கள், பயன்படுத்தப்படாத 19 சிம் கார்டுகள், பயன்பாட்டில் இருந்துவந்த 21 சிம் கார்டுகள், அலுவலக வேலையாட்களின் 3 வருகைப் பதிவேடுகள் 3, பாதிக்கப்பட்ட நபர்கள் பணம் செலுத்திய விபரங்கள் அடங்கிய 13 நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.


இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே கொலை மற்றும் பண மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

இவர்கள் மீது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 17 மாவட்டங்களில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நாகப்பட்டினம் மேல கோட்டைவாசலைச் சேர்ந்த கார்த்தீசன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

அப்போது, திருவாரூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் தொடர்பாக கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தற்போது தலைமறைவாகவுள்ள சாய் என்கிற கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்களுடன் கார்த்திசனுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கார்த்திசன், அரக்கோணம் சென்று அங்கே செயல்பட்டுவந்த கோபாலகிருஷ்ணன் கும்பலுடன் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டார் என்கினறனர் சைபர் க்ரைம் போலீஸார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கார்த்திசன் ஒன்பதாவது வரை படித்துள்ளார். ஆனால், மற்றொரு குற்றவாளியான சுரேஷ் ஒரு பிபிஏ பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.