21,000 லஞ்சப்புகார்கள்… 2 -க்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர்… லஞ்ச ஒழிப்புத்துறையையே ஒழித்துகட்டிய அதிகாரிகள் !அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்! அங்குசம் Exclusive!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

21,000 லஞ்சப் புகார்கள் 2 -க்கு மட்டுமே எஃப்.ஐ. ஆர் ! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்! அங்குசம் Exclusive!  21,660 லஞ்சப்புகார்கள்; 2 புகார்களுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு… 56 நீதிமன்ற வழக்குகள் தள்ளுபடி; 6 வழக்குகளுக்கு மட்டுமே மேல்முறையீடு என தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் அவலங்கள் ஆதாரப்பூர்வமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னிச்சையாக செயல்பட விடுவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு முன்பு இருந்ததைவிட இன்னும் மோசமாகிவிட்டது என்கிற பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு
தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு

அங்குசத்துக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரம்! ‘அங்குசம்’ புலனாய்வு இதழுக்கு கிடைத்த பிரத்யேக ஆர்.டி.ஐ. ஆதாரத்தின்படி, கடந்த 2023 ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து, 2024 ஜூன் 1 ஆம் தேதிவரை, தமிழ்நாடு முழுவதிலிருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை எனப்படும் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை 21,660 ஆகும். இதில், 45 புகார்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அப்படியென்றால் 21,615 லஞ்சப் புகார்கள் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதைவிட அதிர்ச்சிகரமானது, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 45 புகார்களில் 2 புகார்களுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெறும் 2 புகார்களுக்கு எஃப்.ஐ. ஆர் போட இத்தனை போலீஸா? சென்னை ஆலந்தூர், 293, எம்.கே.என் சாலையில் தலைமையிடமாக இயங்கி வருகிறது.

Abhay Kumar Singh IPS
Abhay Kumar Singh IPS

தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்(Directorate of Vigilance and Anti-Corruption -DVAC). 2024 ஆம் ஆண்டு, தமிழ்நாடு முழுக்க வந்த புகார்களில் 2 புகார்களுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய இயக்குனர் அபய்குமார் சிங் தலைமையில் 3 ஐ.ஜிக்கள், 1 டெபுடி ஐ.ஜி, 6 எஸ்.பிக்கள், 6 கூடுதல் எஸ்.பிக்கள், 44 டி.எஸ்.பிக்கள், 101 இன்ஸ்பெக்டர்கள், 46 எஸ்.ஐ.கள், 131 தலைமைக்காவலர்கள், 269 (கிரேடு-1, கிரேடு-2 ) என இத்தனை போலீஸார் தேவையா?

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தையே காலி செய்துவிட்டு காய்கறி கடையோ, மளிகைக் கடையோ வைத்தால், தமிழ்நாடு அரசுக்கு ஏதாவது வருமானமாவது வருமே என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பியிருக்கிறது.

50 வழக்குகள்… 5 கோடி ரூபாய் அபேஸ் ! லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை விசாரணைக்கு எடுத்து, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த வழக்குகளில் 56 வழக்குகளில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளில் சரியான ஆதாரங்களையும் ஆவணங்களை திரட்டி மேல்முறையீடு செய்யாமல் அதில், 6 வழக்குகளுக்கு மட்டுமே மேல்முறையீடு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஏற்கனவே, வரும் புகார்களை விசாரணைக்கு எடுப்பதே 1 சதவீதத்திற்கு கீழ்தான்.

RTI தகவல்
RTI தகவல்

அதில், எஃப்.ஐ.ஆர். போட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதே ஒன்றிரண்டு புகார்களில்தான். அப்படி நடத்தப்பட்ட 56 வழக்குகளிலாவது சரியான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தண்டனை வாங்கிக் கொடுக்கமாட்டீங்களா? சரி, தண்டனை வாங்கித்தான் கொடுக்கமுடியல. மேல்முறையீடுகூட செய்யமாட்டீங்க. விசாரணை செய்து, ஆவணங்களை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வழக்கு நடத்த 1 வழக்குக்கு மட்டுமே 10 லட்ச ரூபாய் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படின்னா, 50 வழக்குகளை மேல் முறையீடு செய்யாமல், லஞ்ச குற்றச்சாட்டு ஆளானவர்கள் விடுதலை ஆவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதால் 5 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கீங்க. ஸ்ஸ்…ஹப்பாடா… உங்களையெல்லாம் வெச்சுக்கிட்டு… முடிய்ய்ய்ல!

பாதியாக குறைந்த எஃப்.ஐ.ஆர்கள்!

கடந்த, 2019 ஆம் ஆண்டு 281 ரெகுலர் புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர. 2020 ஆம் ஆண்டு 249 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 248 எஃப்.ஐ.ஆர்கள். ஆனால், 2022 ஆம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது, 130 என அப்படியே பாதிக்கு பாதி குறைந்துள்ளது.

MKS Vs EPS
MKS Vs EPS

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2023 அக்டோபர் மாதத்திலும் 102 வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி-1 ஆம் தேதியிலிருந்து 2023 ஜனவரி-1 ஆம் தேதிவரை, தமிழ்நாடு முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகார்கள் 15 ஆயிரத்து 772 ஆகும். ஆனால், அதில், 46 புகார்களைத்தான் முதற்கட்ட விசாரணைக்கே எடுத்திருக்கிறார்கள். அதில், 8 புகார்களைத்தான் விரிவான விசாரணைக்கே எடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், 15 ஆயிரத்து 772 புகார்களில் மொத்தம் 54 புகார்கள்தான் விசாரணைக்கே எடுக்கப்பட்டுள்ளன.

2023 வரை 130 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகார்களை 2020 ஆம் ஆண்டு சேர்த்து எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி மாதம்வரை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 166 வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதில், 56 பேர் விடுதலை ஆகிவிட்டார்கள். அந்த 56 வழக்குகளில்தான் 6 வழக்குகளுக்கு மட்டுமே மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

அறப்போர் இயக்கம் - ஜெயராமன்
அறப்போர் இயக்கம் – ஜெயராமன்

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை ஆதாரங்கள், ஆவணங்களுடன் அனுப்பிவைத்து சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அறப்போர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 2 விதமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, லஞ்சம் வாங்கும்போது பணத்தில் ரசாயன பவுடர் தடவி, மறைந்திருந்து பிடிக்கும் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என சின்ன சின்ன ட்ராப் (TRAP) புகார்கள் 2023 ஆம் ஆண்டு அதிகமாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, லஞ்சம் கேட்கும் ஆடியோ உள்ளிட்ட ஆவணங்களை புகார்தாரர் கொடுக்கவேண்டியிருக்கு.

இதுபோன்ற, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துடுவாங்க. ஆனா, ரெகுலர் கேஸ் (regular case) எனப்படும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அலுவலர்கள் மீது லஞ்சக்கணக்குல, கோடிக்கணுக்குல பெரிய பெரிய ஊழல் புகார்கள் கொடுத்தோம்னா, அந்த புகார்களை விசாரணைக்கே எடுத்துக்கிறதில்ல. அந்த ரெகுலர் கேஸ் தொடர்பானதுதான் இந்த ஆர்.டி.ஐ. ஆதாரங்கள். அறப்போர் இயக்கம் மட்டுமே இதுவரை 30 ஊழல் புகார்களை கொடுத்திருக்கிறது.

இலஞ்சம்
இலஞ்சம்

ஆனா, 6 புகார்களுக்கு மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்காங்க. பயணிகள் நிழற்குடை ஊழல் தொடர்பான அறப்போர் இயக்கத்தின் புகாரில் எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லி அரசாங்கமே அனுமதி கொடுத்த பிறகும்கூட லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் எஃப்.ஐ.ஆர் போடல. அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கே.பி. பார்க் தரமற்ற குடியிருப்பு கட்டிய ஊழல் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் போடவே இந்த அரசு இப்போதுவரை அனுமதி கொடுக்கல.

இப்போதைய ஆட்சியில் குவாரி புகார்கள் மீது நடவடிக்கை ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், அந்த புகாரை தமிழ்நாடு அரசின் கனிமவளத்துறைக்கே அனுப்பிவைத்துவிட்டார்கள். ட்ரான்ஸ்ஃபார்மர் ஊழலிலும் எஃப்.ஐ.ஆர் போடல. சாலை போடுவதற்கு முன்பே காண்டிராக்டருக்கு 4 1/2 கோடி ரூபாய் கொடுத்த ஊழலில் விசாரணைகூட செய்யல. இப்படி, பல புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கல. ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு கேட்டா, வழக்குப்பதிவு செய்தாலே இ.டி. (அமலாக்கத்துறை) ரெய்டு வந்துடும். ஆட்சிக்கு கெட்டப்பெயர் உண்டாகும். அதனால, எஃப்.ஐ.ஆர் போடக்கூடாது என்பது மேலிட உத்தரவு என்றே லஞ்ச ஒழிப்புத்துறை ஆஃபிசர்களே சொல்றாங்க.

ரெகுலர் புகார்களில் மற்ற துறைகளுக்கு அனுப்பும் லஞ்ச- ஊழல் புகார்களை காப்பி டூ – னு போட்டு அனுப்புவதால் நாங்க ரிஜக்ட் பண்ணிடுறோம். அப்புறம் நிறைய மொட்டை பெட்டிஷனா வருது. அதனாதான், இத்தனை புகார்கள் ரிஜக்ட் ஆகுதுன்னு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. அதுக்காக, 99 சதவீத ரெகுலர் புகார்களை ரிஜக்ட் பன்றது நியாயமா? காப்பி டூ -னு போட்டு வருதோ, மொட்டை பெட்டிஷனா வருதோ? அதுல ஆதாரங்கள், ஆவணங்கள் இருந்தா விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிதானே?” என்று கேள்வி எழுப்புகிறார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்

இதுகுறித்து, விளக்க கேட்க சென்னை ஆலந்தூரிலுள்ள தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு அவர்களது வெப்சைட்டிலுள்ள தொடர்பு எண்களான 044- 22321090 மற்றும் 22321085 தொடர்புகொண்டபோது, வேலை செய்யவில்லை. 044-22342142 என்ற எண்ணில் எடுத்து பேசிய ஆஃபிசர் ஒருவர், “நீங்க கேட்குற கேள்விகளுக்கு ஃபோனில் பதில் சொல்லமுடியாது. எங்களோட நோடல் ஆஃபிசர் ராம்தாஸ் என்பவரை நேரில் பார்த்து விளக்கம் கேட்கவும்” என்றார். அவரது தொடர்பு எண் கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டர்.

ஐநூறும் ஆயிரமும் வாங்கும் வி.ஏ.ஓ. வையெல்லாம் பொறி வைத்து பிடிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை ஆஃபிசர்ஸ், அதுக்கும் மேல உள்ள அதிகாரிகளையெல்லாம் கண்டுக்கமாட்டாங்கனு எடுத்துக்கலாமா? பேசாமல், “இலஞ்ச ஒழிப்புத்துறை”-னு மாவட்டம் தோறும் இருக்கிற அலுவலக போர்டில் சின்னதா ஒரு ஸ்டார் போட்டு, கண்டிசன் அப்ளைனு * ஐநூறு – ஆயிரம் மட்டும் * குரூப் – 4 அதிகாரிகள் மட்டும் என்று எழுதி போட்டு விடுங்களேன் !

– மனோசெளந்தர்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.