எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்தா பயந்து நடவடிக்கை எடுக்கணுமா?- கறார் கட்டப்பஞ்சாயத்து பெண் இன்ஸ்பெக்டர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்தா பயந்து நடவடிக்கை எடுக்கணுமா?- கறார் கட்டப்பஞ்சாயத்து பெண் இன்ஸ்பெக்டர்!

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையங்களில் புகார் கொடுத்து நடையாய் நடக்கிறார்கள். ஆனாலும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுக்காதபோது வேறு வழியில்லாமல் டி.எஸ்.பி., எஸ்.பி என உயரதிகாரிகளிடம் புகார் கொடுக்கிறார்கள்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழ்ச்செல்வனும் அபிராமியும் இணைந்து எடுத்துக்கொண்ட படம்

அப்படி, புகார் கொடுத்த பெண்ணிடம் “எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்துட்டா பயந்துக்கிட்டு உனக்கு கைக்கட்டிக்கிட்டு வந்து நடவடிக்கை எடுக்கணுமா? ஒழுங்கா நான் சொன்னதை செய்” என்று அலட்சியமாக மிரட்டி அனுப்பியதாக விழுப்புரம் மாவட்ட மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதுகுறித்து, நாம் விசாரித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிராமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)க்கு தனது தோழி சுபா மற்றும் சுபாவின் கணவர் முருகன் மூலம் அறிமுகமாகியிருக்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.

“நீயும் திருமணமாகி கணவரை பிரிஞ்சிட்ட. தமிழ்ச்செல்வனுக்கு திருமணமாகி 14 வருடங்கள் குழந்தை இல்ல. அதனால, அவரோட மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் பண்ணிக்க ஆசைப்படுறாரு. உன்கிட்ட கேட்க சொல்றாரு. நீ என்ன சொல்ற?” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார் அபிராமியின் தோழி சுபா. ஆரம்பத்தில் தயங்கினார் அபிராமி.

விழுப்புரம் டார்லிங் நிறுவனத்தில் ஆர். ஆர்.எம். ( ரீஜினல் மேனேஜர்) ஆக இருப்பதாக அபிராமியிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட தமிழ்ச்செல்வன்,
”14 வருடமா குழந்தை இல்ல. பாண்டிச்சேரி முருங்கப்பாக்கத்திற்கு ஆஸ்திரேலியேவிலிருந்து ஒரு டாக்டர் வந்திருந்தாங்க.

20 லட்ச ரூபாய்வரை செலவு செய்துவிட்டேன். தெளிவா உட்காரவைச்சு சொல்லிட்டாங்க. உங்க மனைவிக்கு கர்ப்பப்பை திரும்பி இருக்கு. அதனால, 99 சதவீதம் குழந்தை இருக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டாங்க.

எங்கப்பா இறந்துட்டாருன்னா நான் தூக்கி கொள்ளிவைப்பேன். ஆனா, கடைசி காலத்துல உட்கார்ந்துட்டேன்னா தண்ணி மொண்டுக்கொடுக்கக்கூட எனக்கு ஆள் கிடையாது.
இவ்ளோ, நாளா ஏனோதானோன்னு வாழ்ந்துட்டேன். எனக்கு, ஒரு வாரிசு வேணும். உனக்கும் ஒரு லைஃப் இல்லாம இருக்கு. நீ எனக்கு ஒரு லைஃப் கொடு. நான் உனக்கு ஒரு லைஃப் கொடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

“உங்க வைஃப் ஒத்துப்பாங்களா?” என்று அபிராமி கேட்க,
“அவளுக்கும் சம்மதம்தான்” என்றவர் அவரது அம்மா லட்சுமியிடம் ஃபோன் பண்ணி சொல்கிறார், அவரும் ஒப்புக்கொள்கிறார்.

தமிழ்ச்செல்வனும் அபிராமியும் திருமணம் முடிந்து எடுத்துக்கொண்ட படம்

 

ஒருக்கட்டத்தில் தனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டும் என்று யோசித்த அபிராமி ஒப்புக்கொண்டார். அபிராமியும் தமிழ்ச்செல்வனும் காதலித்து பிறகு, விழுப்புரம் வழுத ரெட்டி கோயிலில் 16-06-2021 அன்று திருமணம் செய்துகொண்டார்கள் (திருமணம் செய்த ஃபோட்டோக்கள், வீடியோக்கள் ஆதாரங்கள் உள்ளன) அபிராமி கர்ப்பமானார்.

திருமணத்திற்குப் பிறகு, தனது அப்பா-அம்மா வசிக்கும் மேலத்தாங்கல் வீட்டில் அபிராமியை தங்கவைத்தார் தமிழ்ச்செல்வன். தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மாதந்தோறும் பரிசோதித்து கவனித்துவந்தார் தமிழ்ச்செல்வன்.

 

தமிழ்ச்செல்வனின் அப்பா கொரோனாவால் பாதிக்கப்பட “கர்ப்பிணியான உனக்கும் கொரோனா தொற்றிவிடும். அதனால், நீ விழுப்புரத்தில் சென்று பாதுகாப்பாக இரு” என்று அபிராமியை அனுப்பியுள்ளார்.
ஆனால், பெற்றோர் வீட்டிற்கு சென்ற அபிராமியை, தமிழ்ச்செல்வன் தன் வீட்டிற்கு மீண்டும் அழைத்து செல்லவும் இல்லை; அழைக்கவும் இல்லை. இனி கர்ப்பத்தை கலைக்கமுடியாது என்பது தெரியவந்தவுடன் தமிழ்ச்செல்வனின் செயல்பாடுகளில் மாற்றம் வர ஆரம்பித்தது.

தமிழ்ச்செல்வனின் அம்மா லட்சுமி சாதிப்பெயரைச்சொல்லி அபிராமியை இழிவாக பேச ஆரம்பித்திருக்கிறார். (இதுகுறித்த, புகாருக்கும் இன்ஸ்பெக்டர் கவிதா நடவடிக்கை எடுக்கவில்லை) அபிராமியை தமிழ்ச்செல்வன் மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லவில்லை.

 

கர்ப்பமானதால் தனது பணியிலிருந்தும் விலகிவிட்டார் அபிராமி. இதனால், மருத்துவச்செலவுகளுக்குக்கூட எந்த உதவியும் செய்யாததால் தமிழ்ச்செல்வனை பலமுறை தொடர்புகொண்டார் அபிராமி.

ஆனால், தமிழ்ச்செல்வன் ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை. இதனால், கர்ப்பிணியான அபிராமி, தமிழ்ச்செல்வனின் வீட்டிற்கே சென்றார். ஆனால், தமிழ்ச்செல்வன் வீட்டில் இருக்கும்போதே அவர் வீட்டில் இல்லை என்ற முதல் மனைவி ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீஸை வரவழைத்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் கவிதா

இதனால், அங்குவந்த போலீஸ் தமிழ்ச்செல்வனை தேடுவதுபோல் தேடிவிட்டு அவன் வீட்டில் இல்லை என்று சொல்லி, அபிராமியை அங்கிருந்து அனுப்பிவைப்பதிலேயே குறியாக இருந்தனர்.

அதற்குப்பிறகு இரண்டு மாதங்கள் ஆனபிறகும்கூட, தமிழ்ச்செல்வனிடமிருந்து எந்த ஃபோன் காலும் வராததால் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2021 அக்டோபர் 22 ஆம் தேதி புகார் கொடுத்தார் அபிராமி.

ஒரு பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு நடுத்தெருவில் விட்டுச்சென்ற தமிழ்ச்செல்வனை அழைத்து விசாரிக்காமல், காவலர் ஜெயப்பிரியா, எஸ்.ஐ. சந்திரா, இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், கர்ப்பிணியும் புகார்தாரருமான அபிராமியை அடிக்கடி காவல்நிலையத்துக்கு வரவழைத்து அலைகழித்து அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒருக்கட்டத்தில், தமிழ்ச்செல்வனின் வழக்கறிஞர் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து, இன்ஸ்பெக்டர் கவிதாவை சந்தித்து பேசிவிட்டு போனபிறகு, “எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இந்த புகாரை முழுக்க முழுக்க இன்ஸ்பெக்டர் கவிதாதான் விசாரிக்கிறார்” என்று கூறி, இப்புகாரை விசாரித்த மற்ற மகளிர் காக்கிகள் நழுவிக்கொண்டார்கள்.

இந்நிலையில்தான், தமிழ்ச்செல்வனை அழைத்தாவது விசாரியுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கவிதாவிடம், வயிற்றில் குழந்தையுடன் நடையாய் நடந்தார் அபிராமி.
அப்போதைய, டி.எஸ்.பி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில் ஒருநாள் தமிழ்ச்செல்வனின் வீட்டிற்கு போலீஸை அனுப்பியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் கவிதா. ஆனால், வீட்டிலிருந்த தமிழ்ச்செல்வனுக்கு, விழுப்புரம் மகளிர் போலீஸ் போவதற்கு முன்பே தகவல் கிடைத்துவிட, தமிழ்ச்செல்வன் எஸ்கேப்.

 

ஈவு இரக்கமில்லாத இன்ஸ்பெக்டர் கவிதா, “இங்கப்பாரும்மா, நீ ஏதோ வாடகைத்தாயாதான் பிள்ளை பெற்றுத்தர்றேன்னு போனியாமே? தமிழ்ச்செல்வன் மேலேயும் உன்மேலேயும் இப்படித்தான் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கா. இப்போ, உன்மேலதான் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறி மிரட்டியிருக்கிறார், வாடகைத்தாய் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவியல்கூட தெரியாத இன்ஸ்பெக்டர் கவிதா.

“கரு வளரமுடியாத அளவுக்கு மனைவியின் கர்ப்பப்பை வீக்காக இருந்தால், அவரது கருமுட்டையையும் கணவரது விந்தணுவையும் மருத்துவமனையில் ஒன்றாக சேர்த்து ஒரு பெண்ணின் வயிற்றில் வளரச்செய்து குழந்தையாக பெற்று கொடுப்பதுதான் வாடகைத்தாய். தன், கணவரோடு இன்னொரு பெண்ணை சேர்த்துவைத்து கர்ப்பமாக்கி பெற்றெடுப்பது வாடகைத்தாய் அல்ல. அப்படிச் செய்தால் அது கிரிமினல் குற்றம்.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்படியென்றால், தமிழ்ச்செல்வன் மீதும் தமிழ்ச்செல்வனின் முதல் மனைவி மற்றும் குடும்பத்தார் மீதும்தான் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார்தாரர் அபிராமியின் தரப்பு எடுத்துச்சொல்ல, அதோடு அந்த டாப்பிக்கை விட்டுவிட்டு அட்வைஸ் என்கிற பெயரில், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் கவிதா.

“உன்னை கல்யாணம் பண்ணினது, கர்ப்பமாக்கினது எல்லாத்தையும் தமிழ்ச்செல்வன் ஒத்துக்கிறான். ஆனா, உனக்கும் அவனுக்கு எந்த தொடர்பும் இல்லைன்னு எழுதிக்கொடுத்துட்டா, முதல் மனைவி கொடுத்த புகாரை க்ளோஸ் பண்ணிடுவேன். தமிழ்ச்செல்வனோ முதல் மனைவிக்கு தெரியாமல் உன்னை வீடு எடுத்து பார்த்துக்கிறேன்னு சொல்றான். என்னம்மா சொல்ற?” என்று தமிழ்ச்செல்வனின் வழக்கறிஞர் ஆலோசனைப்படி இப்படியொரு டீல் பேசியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் கவிதா.

“இதையெல்லாம், காவல்நிலையத்துக்கு வந்து தமிழ்ச்செல்வனை எழுதிக்கொடுத்துட்டுப் போகச்சொல்லுங்க” என்று அபிராமி கேட்டதற்கு, “அவன் தான் ஃபோனை அட்டெண்ட் பண்ணமாட்டேங்குறானே? கூப்ட்டாலும் வரமாட்டேங்குறானே?” என்று கூறியிருக்கிறார். புகாருக்குள்ளானவர் ஸ்டேஷனுக்கு வர மறுக்கிறார், ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை என்று கூறுவதற்கு மகளிர் போலீஸ் எதற்கு? கடைசிவரை தமிழ்ச்செல்வனை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கவும் இல்லை.

 

அவருக்கு சம்மன் அனுப்பவுமில்லை இன்ஸ்பெக்டர் கவிதா.
இனியும் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் நியாயம் கிடைக்காது என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நவம்பர்-22 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். டி.எஸ்.பி. பார்த்திபன் விசாரித்திருக்கிறார். எஸ்.பி ஆஃபிஸ் இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்து பேசிவிட்டு இன்ஸ்பெக்டர் கவிதாவை போய் பார்க்கச்சொல்லியிருக்கிறார்.

 

“எங்கப்போனாலும் இங்கதான் வந்தாகணும். எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்துட்டா கையை கட்டிக்கிட்டு வந்து நடவடிக்கை எடுப்பேன்னு நினைச்சுட்டியா?” என்று அலட்சியமாக பேசி அனுப்பியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் கவிதா. தற்போது, அபிராமிக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனாலும் தமிழ்ச்செல்வனை இதுவரை காவல்நிலையத்துக்கு அழைத்துகூட விசாரிக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் கவிதா

இதுதொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் நாம் பேசுகையில்,

“சட்டப்படி ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பர்தான் தமிழ்செல்வனுடைய முதல் மனைவி. குழந்தை இல்லையென இரண்டாம் தாரமாக அபிராமியை திருமணம் செய்துள்ளார் தமிழ்ச்செல்வன்.
அபிராமிக்கும் இது இரண்டாவது திருமணம். அபிராமி முதல் திருமணத்தை சட்டப்படி விவாகரத்து பெறவில்லை.

ஊரில் பெரியவர்களை வைத்து கையெழுத்துப்போட்டு பிரிந்திருக்கிறார்.
தமிழ்ச்செல்வனின் முதல்மனைவியோ, ‘என்னோட கணவரை எப்படி நான் விட்டுக்கொடுக்கிறது? ’என்று கேட்கிறார்.

 

இதில், நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை” என்றவரிடம்
”குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனை குறைந்தபட்சம், காவல்நிலையத்துக்கு அழைத்தாவது விசாரித்திருக்கலாமே?” என்று நாம் கேட்டபோது “தமிழ்ச்செல்வன் கடைசிவரை ஸ்டேஷனுக்கு வர மறுத்துவிட்டார்.

அவரது, வழக்கறிஞர்தான் வருகிறார், பேசுகிறார்” என்று பொறுப்பில்லாமல் கூறிய இன்ஸ்பெக்டர் கவிதாவிடம், “தமிழ்ச்செல்வனுக்கு சம்மனாவது அனுப்பப்பட்டதா?” என்று நாம் கேட்டபோது, “சம்மன் அனுப்பிவிட்டோம்” என்றவர், எந்த தேதியில் சம்மன் அனுப்பப்பட்டது என்பதை கடைசிவரை கூறவில்லை.

மேலும், இதுத்தொடர்பாக தமிழ்ச்செல்வனுக்கும் அபிராமிக்கும் திருமண ஏற்பாடுகளை செய்த சுபாவிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது,

 

“நானும் தமிழ்ச்செல்வனும் 10 வருடங்களுக்கு முன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினோம். அதன்முலம், எனக்கும் என் கணவருக்கும் நண்பராக அறிமுகமானார்.

இவரைப்போலதான் அபிராமியும் எனக்கு நன்கு தெரிந்த நபர். தமிழ்ச்செல்வன் எங்களிடம் ஒருநாள், குழந்தை இல்லை என்று புலம்பிவந்ததுடன் தனது மனைவி ஒப்புதலின்பேரில் மற்றொரு திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும், அதற்கு பெண் இருந்தால் பார்க்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நாங்களும் அவரைப்பற்றி தெரிந்ததால், அபிராமியின் முதல் திருமணம் உட்பட முழுவிவரத்தையும் கூறினோம். அபிராமிக்கு சம்மதம் என்றால் திருமணம் செய்துக்கொள்வதாக கூறினார்.

அதன்பிறகு, தமிழ்ச்செல்வனும் அபிராமியை சந்தித்து பேசி, இரண்டு பேரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
நன்றாகத்தான் இருவரும் குடும்பம் நடத்தி வந்தார்கள். அபிராமி கர்ப்பமானத்திலிருந்து தமிழ்ச்செல்வன் தான் ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து சென்று வந்தார்.

திடீரென்று, என்ன ஆனது என்று தெரியவில்லை.
பாவம் அந்த பொண்ணு. அவளோட வாழ்க்கைய இப்படி நாசமாக்கிட்டான் அந்த மனுசன். இதுத்தொடர்பா என்னிடமோ, என் கணவரிடமோ போலிசோ மற்ற யாரோ விசாரிக்கல. கண்டிப்பா எங்களிடம் விசாரிக்கும்போது உண்மைய சொல்லுவோம்” என்று கண்கலங்கியபடி கூறினார்.

மேலும், இதுத்தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனிடம் நாம் கேட்டபோது,

அபிராமிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்தவரிடம்,
சுபாவை உங்களுக்கு தெரியுமா? உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆனதாகவும் அவங்கதான் ஏற்பாடு பண்ணினதா சொல்றாங்களே?

 

2021 மார்ச்-22 தேதி முதல் முதலில் பனையபுரத்துல கார்ல போயி மீட் பண்ணுனீங்களா? அடுத்த இரண்டு நாளில் பெரம்பலூர்ல கலியபெருமாள் கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போனீங்களா? அதுக்கப்புறம் ராமேஸ்வரம் கூட்டிக்கிட்டுப்போறேன்னு சொல்லிட்டு, நீங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போனீங்களா? மீண்டும் பெரம்பலூருக்கு கூட்டிக்கிட்டு போனீங்களா? ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விழுப்புரம் சுமதி மருத்துவமனைக்கு எதுக்கு கூட்டிக்கிட்டு போனீங்க?

 

திருமணமே ஆகலைன்னு சொன்னீங்க. 16-6-2021 விழுப்புரம் வழுதரெட்டியிலுள்ள கோயில் திருமணம் செய்துகொண்ட ஃபோட்டோ, வீடியோக்கள் உள்ளதே அது நீங்க இல்லையா?” என்று நாம் கேட்ட கேள்விகளுக்கு தமிழ்ச்செல்வன் விளக்கம் அளிக்கவில்லை.

விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா

இன்ஸ்பெக்டர் கவிதாவின் அலட்சியம் குறித்து, விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாத் ஐ.பி.எஸ்ஸின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, “இப்புகார் குறித்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளை உடனடியாக விசாரிக்கிறேன்” என்றார் அதிரடியாக.

பெண்கள் சட்ட விதிமுறைகளை தெரிந்துகொண்டு விழிப்புணர்வோடு திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற ஆண்களிடம் ஏமாறவேண்டிய சூழல் ஏற்படும். இதைப் பயன்படுத்தி மகளிர் காவல்நிலையை போலீஸார்தான் கல்லா கட்டிக்கொண்டிருப்பார்கள்.

வெற்றிவேந்தன், இந்தர்ஜித்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.