திமுக மகளிர் அணிக்கும் -இளைஞர் அணிக்கும் இடையே தொடங்கிய போட்டி ; வெற்றி யாருக்கு!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

டிசம்பர் 18 திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 100 பேரில் 30 பேர் திமுக காரர்களாக இருக்க வேண்டும். திமுக ஆட்சி செய்கிறது என்பதால் மெத்தனமாக இருக்கக்கூடாது. மேலும் கட்சிக்கு இளைஞர்களையும், இளம் பெண்களையும் அதிக அளவில் அணிதிரட்டி வரவேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட திமுக செயலாளர்களுமே கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை சேர்க்க முயற்சியிலும் தீவிரமாக களம் இறங்கத் தொடங்கிவிட்டனர். இப்படி ஒவ்வொரு எம்எல்ஏக்களும், மாவட்ட செயலாளர்களும் கடுமையாக போட்டி போட்டுக்கொண்டு பணியை தொடங்கி விட்டனர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அதேநேரம் திமுக இளைஞரணியை வலிமைப் படுத்தும் நோக்கோடு இளைஞர்களையும், இளம்பெண்களையும் கட்சியில் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளும் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களையும் இளம்பெண்களையும் சென்று சந்தித்து திமுகவின் இளைஞர் அணியில் இணைத்து வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்குபெற்று சிறப்புரை ஆற்றினார். அதில் இளம்பெண்கள் அதிக அளவில் திமுக இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இதைத்தொடர்ந்து கோயமுத்தூர் மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் அந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் பொழுதே கனிமொழியை தொடர்பு கொண்டு 18 வயது முதல் 30 வயது இருக்கக் கூடிய இளம்பெண்களை திமுக இளைஞர் அணி சேர்த்தால் மகளிர் அணியின் பலம் குறைந்துவிடும். மகளிர் அணியை பலப்படுத்த வேண்டும், மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் பேசியிருக்கிறார். இந்த நிலையில் 28 வயது முதல் 30 வயது இருக்கக்கூடிய பெண்களை இளைஞரணி சேர்த்தால் மகளிரணி என்ன செய்யும் என்று கனிமொழியின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளனர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்.

3

இதையடுத்து கோயமுத்தூரில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கனிமொழி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களாலும், எழுச்சிமிக்க பெண்களாலும் கட்டமைக்கப்பட்ட பேரியக்கம் நமது கழகம். நமது கழகத்தின் அடித்தளமாக விளங்கும் இளையர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், நமது கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் நம் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2021 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார். தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள், அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18-30 வயதுடைய இளம் பெண்கள். நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பது. நமது கழக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் இன்றிருக்கும் 18-30 வயதிற்குள்ளான இளம் பெண்களை நமது கழகத்தில் ‘ மகளிரணி உறுப்பினர்களாக ’ இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அரசியலில் ஆர்வம் காட்டத் துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம். இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே துவக்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.