ஆளுநர் ஒப்புதல் இல்லாததால் பின்வாங்கிய திமுக !

0

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 7 மாத காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டுவர முயற்சிகள் எடுத்து இருக்கிறது. அதில் பல திட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியும் சில திட்டங்களுக்கு காலம் தாழ்த்தியும் வருகிறார். இப்படி ஆளுநர் காலம் தாழ்த்தும் திட்டங்கள் என்று பார்க்கும்பொழுது மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ்நாடு அரசுக்கும் தமிழக ஆளுநருக்குமான முரண்பாடு இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை தயார் செய்து அதை ஆளுநர் கையெழுத்திருக்காக அனுப்பிவைத்தது. ஆனால் ஆளுநரோ கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தி வந்தார், மேலும் இந்த நிலையில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் அரசாணைக்கு அவர் நேரடியாக தமிழக அரசிடம் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் தமிழ்நாடு அரசு அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசித்து வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்புகளில் இனிய தமிழ் புத்தாண்டு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தயாராகி உள்ள சிறப்பு மலரில் பொங்கல் வாழ்த்துக்கள் என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் புத்தாண்டு விஷயத்தில் தற்போது திமுக தன்னுடைய நிலையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல் கசிகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக வடிவமைக்கப்பட்ட துணிப்பையிலும் மாற்றம் செய்து பொங்கலை மட்டும் குறிக்கும் வாசகம் இடம் பெற்றிருக்கிறது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.