பெண் போலிச்சாமியாரை கேலி செய்பவர்களை விளாசும் பெண்ணியவாதி நாச்சியாள் சுகந்தி!

0

பெண் போலிச்சாமியாரை கேலி செய்பவர்களை விளாசும் பெண்ணியவாதி நாச்சியாள் சுகந்தி!

திடீர் பெண் போலிச்சாமியரை கேலி செய்து விமர்சித்துக் கொண்டிருப்பவர்களை, தனது கருத்துகளால் விளாசியிருக்கிறார் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான நாச்சியாள் சுகந்தி.

எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி

2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில், மற்றொரு பெண்ணின் கணவரோடு தொடர்பு இருந்ததாக புகார் கூறப்பட்ட பெண் அன்னபூரணி,

7 வருடங்களுக்குப்பிறகு திடீரென்று, தற்போது சாமியார் என்கிற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும் வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போதைய பரபரப்பு டாப்பிக். ஜனவரி 1-ஆம் தேதி அன்னபூரணி நடத்த இருந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில்தான் ‘அங்குசம்’ செய்திக்காக நாச்சியாள் சுகந்தியை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, திடீர் போலிச்சாமியார் அன்னப்பூர்ணியை கேலி செய்கிறவர்களை விளாசினார், “போலிச் சாமியார்கள் என்பவர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் தான். பல்வேறு, காலக்கட்டங்களிலும் இவ்வாறான வழிபாடு இருந்திருக்கிறது.

அன்னபூரணி

ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ சிவ சங்கர் என்று எத்தனையோ ஆண் சாமியார்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு, அரசாங்கமே ஆதரவாக செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் தற்போது ஒரு பெண், சாமியாராக வருகிறார்.

பெரும்பாலும் சாமியாராக உருவெடுக்கும் ஆண்களிடம் கேட்டால், குடும்ப வாழ்க்கையில் தோல்வி, திருமண வாழ்க்கை தோல்வி, குடும்பச் சுமை, குடும்பப் பிரச்சனை இப்படி பல்வேறு காரணங்களால் துறவரம் பூண்டதாக கூறுவார்கள். இப்படி ரிஷிகேஷ், வாரணாசி போன்ற பகுதிகளில் சாமியார்கள் துறவரம் அடைந்திருக்கின்றனர்.

 

தமிழ்நாட்டிலும் எத்தனையோ சாமியார்கள் இப்படி இருக்கின்றனர். இவர்களின் தொடர்ச்சியாகதான் அன்னபூரணி என்ற பெண்ணும் சாமியாராக மாறியிருக்கிறார்.

ஆண்கள் சாமியார் ஆகும்போது எழாத விமர்சனம் அன்னபூரணி சாமியாராகும் போது மட்டும் பெருமளவில் எழுந்திருக்கிறது. கும்பல் புத்தியின் அடிப்படையில் ஒருவர் பற்றி மற்றொருவர் விமர்சிக்க தொடங்கினால், அனைவரும் அதைப் பிடித்து கொண்டு எல்லோரும் சேர்ந்து விமர்சிக்கச் செய்வார்கள்.

இதுதான் கும்பல் புத்தி, இந்த கும்பல் புத்தியில் தற்போது சிக்கியிருப்பவர் அன்னபூரணி. ஆண்கள் சாமியார் ஆகும்போது விமர்சிக்காதவர்கள், பெண் சாமியார் என்று சொன்னவுடன் பெருமளவில் விமர்சிக்கின்றனர். கேலி கிண்டல் செய்கின்றனர்.

மேலும், அவருடைய தோற்றமும் அழகாக இருப்பதால், பலரும் நயன்தாரா போல அழகாக இருக்கிற இந்த பெண் சாமியாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் அவர் இந்த அளவிற்கு விமர்சிக்கப் படுவதற்கு காரணம், ஆன்மீக அரசியல் தான். செங்கல்பட்டு மாவட்டத்தில் பராசக்தி பெயரில் ஆலயம் நடத்தி அம்மா என்று கூறிக் கொள்பவர் பங்காரு அடிகளார்.

பங்காரு அடிகளார்

இவரை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் கூட சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை கொண்டு பெரும் பெயரை பெற்றிருக்கிறார்.

மேலும் அவர் மீதும் அவரது மகன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வழக்குகள் இருக்கின்றன. அது அனைத்தையும் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முறியடித்து விட்டார்கள். மேலும் சொல்லப்போனால் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி, மேல்மருவத்தூரையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் பங்காரு அடிகளார்.

இதன், தொடர்ச்சியாகத்தான் மேல்மருவத்தூரில் மத்திய அரசின் மூலமாக ரயில் நிலையம் கொண்டு வந்திருக்கிறார். இந்த, அளவிற்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபராக பங்காரு அடிகளார் உள்ளார். இவரது ஊரில் இவருக்கு போட்டியாக தற்போது அன்னபூரணி வளர்ந்து வருகிறார்.

மேலும் அன்னபூரணியும் ஆதிபராசக்தி என்று தன்னைக் கூறிக் கொள்கிறார். இவரும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு வரக்கூடிய, பக்தர்களை அவர் வசம் இழுத்து விடுவார் என்ற அச்சத்தில்தான், பங்காரு அடிகளார் உள்ளார்.
அன்னபூரணி சொல்லும் 100 வாக்கில் 5 வாக்குகள் பலித்து விட்டால் மக்கள் அவர் பக்கம் சென்று விடுவார்கள்.

இப்படி ஆன்மீகத்தில் தனக்கு போட்டியாக மற்றொரு நபர் வளர்ந்து விடக்கூடாது என்பதன் முயற்சியே அன்னபூரணி மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் அன்னபூரணியின் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதற்கு என்ன காரணம்? அவரை போலீசார் தேடுவதாக குறிப்பிடுவதும் தேவையற்றது” என்று கேள்வி எழுப்புகிறார் நாச்சியாள் சுகந்தி.

வெற்றி வேந்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.