இது நடுத்தர வர்க்கத்தின் கதை – ’3 பி.எச்.கே.’ பத்தி சொன்ன பிரபலங்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘சாந்தி டாக்கீஸ்’ அருண்விஷ்வா தயாரிப்பில் உருவாகி, வரும் ஜூலை.04—ஆம் தேதி ரிலீசாகிறது ‘3பி.எச்.கே’ [ பெட்ரூம், ஹால்,கிச்சன் ]. ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ படங்களின் டைரக்டர் ஸ்ரீகணேஷ் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், யோகிபாபு, சைத்ரா, சரஸ் மேனன், தலைவாசல் விஜய்,  விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஜூன்.26—ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஹீரோ ரவிமோகன்,  டைரக்டர்கள் ராம், மாரிசெல்வராஜ், நித்திலன் சாமிநாதன், மடோனா அஸ்வின், ரவிக்குமார், அஸ்வத் மாரிமுத்து, அரவிந்த், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3 பி.எச்.கேதயாரிப்பாளர் அருண்விஷ்வா பேசும் போது,

Kauvery Cancer Institute App

“எனது அம்மாவின் பெயரில் இந்த நிறுவனம் இருப்பதால் தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனவே இப்படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைத் தாண்டி, நல்ல படத்தைத் தயாரித்ததில் எனக்கு திருப்தி. படத்தில் நடித்து ஒத்துழைப்புக் கொடுத்த நடிகர்-நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

டைரக்டர் ஸ்ரீகணேஷ்,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“இக்கதையை ஓகே பண்ணி, படமாக்கிய அருண்விஷ்வாவிற்கும் நடிப்பதற்கு ஒத்துக் கொண்ட சித்தார்த், சரத், தேவயானி, உட்பட அனைவருக்கும் நன்றி. மியூசிக் டைரக்டர் அம்ரித் உணர்வுப்பூர்வமாக வேலை செய்துள்ளார். எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தத்தின் ஒரு கதை தான் இப்படம் எடுக்கக் காரணம். அதற்கடுத்து எனது குடும்பமும் நடுத்தர மக்களின் கனவும் தான் இப்படம்”.

தேவயானி
தேவயானி

சரத்குமார்,

“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ். இது உங்கள் படம்”.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மீதா ரகுநாத்,

“இது எங்க குடும்பப்படமல்ல. நம்ம அனைவரின் குடும்பப்படம் இது. படத்தில் சரத்-தேவயானி மகளாக நடித்துள்ளேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த டைரக்டரும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.

மீதா ரகுநாத்,
மீதா ரகுநாத்,

படத்தில் நடித்த தேவயானி, சரஸ் மேனன், சைத்ரா, விவேக் பிரசன்னா, மியூசிக் டைரக்டர் அம்ரித் ஆகியோர் பட அனுபவங்களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.

டைரக்டர் ராம்,

“இப்படத்தின் தயாரிப்பாளர் அருண்விஷ்வா என்னிடம் உதவி இயக்குனராக இருந்தவர். எனது தங்க மீன்கள் படத்தின் போது தான் என்னிடம் வந்தார். அப்படம் ரிலீஸ் சிக்கலில் மாட்டிய போது, என்னுடன் இருந்த பலரும் போய்விட்டனர். ஆனால் அருண் மட்டும் தான் இருந்தார். அவர் மூலம் தான் கோடம்பாக்கத்தில் பலரும் அறிமுகமாகி, படமும் ரிலீசானது. எனது ‘பறந்து போ’ படமும் சித்தார்த் நடித்துள்ள இந்தப் படமும் வருகிற நான்காம் தேதி ரிலீசாகிறது. மீடியா சகோதரர்கள் அனைவரும் இரண்டு படத்திற்கும் ஆதரவு தாருங்கள்”.

ஹீரோ ரவிமோகன் உட்பட வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே ‘3 பி.எச்.கே.’ வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

 

—   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.