விரைவில் … காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, 2025–2026 கல்வியாண்டில் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்காக விரைவில் நடைபெற உள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவில், பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

எனவே, 2025–2026 கல்வியாண்டில் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், 39-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலம் பட்டமளிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பட்டமளிப்பு விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 30.09.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதியுடைய மாணவர்கள் உரிய விவரங்களுடன் தங்களது பட்டமளிப்பு விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ruraluniv.ac.in வாயிலாக சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டமளிப்பு விழா நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.