தவெக ஆட்சியின் 50-ஆவது நாள்! அவலங்கள், அலங்கோலங்கள், அசிங்கங்கள்!
தான் ஒரு ’தூயசக்தி’ என தன்னைத் தானே சொல்லிக் கொண்டு கேரவன் பஸ்ஸிலிருந்து வீராப்புப் பேசியவர். ”கேரியரின் உச்சத்தைவிட்டுட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கேன்” என தனக்குத் தானே ’சேவகர்’ பட்டம் கொடுத்துக் கொண்டு 108 சீட்டைப் பிடித்தவர் தவெகவின் தலைவர் ஜோசப் விஜய். அதன் பின் ஆட்சியைப் பிடித்து முதல்வர் நாற்காலியில் உட்காருவதற்காக ஜோசப் விஜய் நடத்திய கேவலக்கூத்துகளையெல்லாம் பார்த்து தமிழ்நாடே 108 ஆம்புலன்ஸில் போய் ஐசியூவில் இருக்க வேண்டிய பரிதாப நிலை.

திருமதி ஷோபா மகனின் சோபா திருவிளையாடல்கள் எல்லாம் இதுவரை தமிழ்நாடு பார்த்திராத பேரவலம். அறிவாலயத்திலிருந்து பனையூருக்கு ஜம்பான திமுக கூட்டணிக் கட்சிகளெல்லாம் விஜய் என்னும் ஒரிஜினல் நடிகனுக்கு முட்டுக் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது அதைவிட பேரவலம். அதிலும் விசிக திருமாவும் மார்க்சிஸ்ட் பெ. சண்முகமும் விஜய்யின் பாதம்தாங்கிகளாகவே மாறி தினமும் திமுகவை தினுசு தினுசாக திட்டுவதை எந்த ரகத்தில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.

தமிழ்நாட்டின் துணை முதல்வராகிவிட்டால், அண்ணன் திருமாவின் மனக்கசப்பும் வெறுப்பும் அடங்குமோ என்னவோ? சரி…போய்த் தொலையுது, இதெல்லாம் அரசியல் ஆட்டங்களின் ஒரு பகுதி என ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
ஆனால் தவெக ஜோசப் விஜய்யின் 50 நாட்கள் அலங்கோல ஆட்சிக்கு இவர்களெல்லாம் நல்ல சாட்சிகளாக இருப்பது தான் பெருங்கொடுமை.

ஊழல் ஜாம்பவான்களான அதிமுக பெருந்தலைகள், தவெகவுக்கு ஜம்பாகிக் கொண்டிருப்பதைப் பற்றி திருமாவோ, சண்முகமோ, வீரபாண்டியனோ வாயே திறப்பதில்லை. தினமும் ஒரு அமைச்சரோ, தவெக எம்.எல்.ஏ.வோ தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு ஏரியாவுக்குப் போய் ஆய்வு என்ற பெயரில் கூத்தடித்து, அதை ரீல்ஸ் போட்டு தமிழர்களை இழிவுபடுத்தும் அசிங்கங்களை கண்டு கொள்வதேயில்லை. அதிலும் கீர்த்தனாவையெல்லாம் அமைச்சராகவே நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் தினந்தோறும் ஜோசப்விஜய்க்கு புகழ் கீர்த்தனை பாடிக் கொண்டிருக்கிறார்கள்… அண்ணன் திருமாவும் தோழர் சண்முகமும் பயந்து அலறும் அளவுக்கு அடித் தொண்டையில் இருந்து கத்திக் கொண்டே இருக்கிறார் கலிங்கப்பட்டி வை.கோபால்சாமி.
இவர்களெல்லாம் ‘சோபா பயனாளர்கள்’ இப்படித்தான் ஜோசப் விஜய்க்கு உடுக்கு அடிப்பார்கள். ஆனால் இந்த உலகத்துக்கே நற்போதனைகள் வழங்கி, மக்களை நல்வழிப்படுத்துவது நாங்கள் தான் என நம்பிக் கொண்டிருக்கும் சினிமாக்காரர்களின் வில்லுப்பாட்டு, விஜய்யையே வெலவெலக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
“சாதி அரசியல், மத அரசியல், பண அரசியல், இதையெல்லாம் ஒழித்துக்கட்டி, ஆட்சியைக் கைப்பற்றிய ‘புனிதர்’ விஜய்” என்றார் வடநாட்டு சங்கி ஃபைனான்சியர்களிடம் சரண்டைந்து கிடக்கும் இயக்குனர் பா.இரஞ்சித்.

ஆனால் விஜய்யின் அமைச்சரவைப் பட்டியல் வெளியானதுமே, சாதி வாரியாக, மதவாரியாக எந்தெந்த தொகுதிகளில் யார், யாரை வேட்பாளராக விஜய் நிறுத்தினார், ரூட் மாஃபியா ஜெகதீஷ் மூலம் பல நூறு கோடிகளை எப்படி இறக்கினார் என்ற சங்கதிகளெல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரித்தன. கடந்த அங்குசம் இதழில் கூட, தவெக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது எத்தனை சீட்டிங் கேஸ்கள், விபச்சார வழக்குகள், ஆள் கடத்தல் வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து வழக்குகள், பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன என்ற பட்டியலே வெளியாகியுள்ளன. இவ்வளவு ஏன் சொந்த சகோதரனின் வீட்டுக்குள்ளே அடியாட்கள் சகிதம் புகுந்து கொலைமிரட்டல் விட்ட நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு. இதில் அடுத்த வாரம் கண்டிப்பா ஆஜராகியே தீரணும்னு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹலோ இரஞ்சித் ப்ரோ… இதக் கொஞ்சம் பாருங்க ப்ரோ…படிங்க ப்ரோ. விஜய்யின் ‘புனிதர்’ பட்டம் அறுந்து தொங்கும் ப்ரோ.

அடுத்து நம்ம சீட்டிங் டைரக்டர் ராமசாமி, ஸாரி…சீனு ராமசாமியின் அருள்வாக்கு என்னன்னா… ”விஜய் ஆட்சிக்கு வந்த இந்த 50 நாட்களில் தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், கட்டிங், கமிஷன் இதெல்லாம் சுத்தமா ஒழிஞ்சிருச்சு. அடேங்கப்பா…. தூயசக்தியின் ஸ்பீடு, செம ஸ்பீடு” இப்படி தனக்குத் தானே சொறிந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய டைரக்டர் சீனு ராமசாமி. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டால், சீனுவின் லேட்டஸ்ட் சீட்டிங் கதைகளைச் சொல்லிக் கதறுவார்.
இப்படி அரசியல் பதவிப் பித்தர்களும் எத்தர்களும், சினிமாப் புகழ் பைத்தியங்களும் நடிகன் ஜோசப் விஜய்யின் அலங்கோல, அசிங்க, அவலங்களுக்கு ‘யோக்கியர் மேக்கப்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சீக்கிரமே நீலச்சாயம் வெளுக்கும்…ராஜா வேஷம் கலையும்.
— கரிகாலன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.