கொலைக்கான 6 மோட்டிவ் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ராமஜெயத்தைக் கொலை செய்வதற்கான 60 மோட்டிவ்களை சி.பி.சி.ஐ.டி. பட்டியலை தயார் செய்தது. அதில் அரசியல் எதிரிகள், ஈகோ யுத்தம், நிலம் வாங்குவதில் ஏற்பட்ட போட்டி, கொடுக்கல் வாங்கல் தகராறு, பெண் தொடர்புகள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளின் தொடர்பு, போலீஸ் அதிகாரிகளிடம் பகை என பெரிய பட்டியலே தயார் செய்து வைத்திருந்தனர்.

இந்த மோட்டிவ்களில் குடும்பத்துக்குள் நிலவிய ஈகோ ,பெண் தொடர்பு, தொழில் பகை, அரசியல் எதிரிகள் உள்ளிட்ட 54 மோட்டிவ்களை இதுவரை விசாரித்து டெலிட் செய்திருக்கிறார்கள். இதில் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் ராமஜெயத்திற்கும் இடையே மோட்டிவ் மட்டும் விசாரிக்கப்படாமல் இருக்கிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதில் (சைலேஷ்குமார் கருணாசாகர், திரிபாதி, ஜார்ஜ்) உள்ளிட்ட சில அதிகாரிகள் பட்டியல் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதிகாரிகளுக்கும் ராமஜெயத்திற்கும் எந்த மாதிரியான தொடர்புகள், இவர்களுக்குள் எங்கே பிரச்சனை நடந்து என்பது பற்றி பல குறிப்புகளை சேகரித்தும், அதை மேலிடத்திற்கு அனுப்பியும் கடைசி வரை அது அப்படியே அமுங்கி போனது.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

கே.என். நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் ஆரம்பத்தில் கொடுத்த வாக்குமூலம் மீண்டும் விசாரித்த போது மாற்றி சொல்லுகிறார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சொல்லி வந்தனர். ராமஜெயம் காலையில் வாக்கிங் சென்றார் என்பதற்கு நேரடி சாட்சிகளாக இருந்த நீதிபதி மணி, மற்றும் வாட்ச்மேன் ஆறுமுகம் ஆகியோர் மீண்டும் மீண்டும் விசாரித்தில் கடைசியாக நீங்களே ஏதாவது எழுதி கொள்ளுங்கள் நாங்கள் கையெழுத்து போடுகிறோம் என்று சொல்லுகிற அளவிற்கு மாறியிருக்கிறார்கள்.

3

காவல்துறை அதிகாரிகளுக்கும் இவருக்கும் எந்த மாதிரியான பிரச்சனை என்பதையும் இதை இதற்கு மேல் விசாரிக்க விடாமல் செய்த அந்த சக்தி யார் என்பது சி.பி.ஐ. அதிகாரிகளின் அதிரடி விசாரணையில் தான் தெரியவரும்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.