ஜூலை -05-ல் ‘7G’ ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜூலை -05-ல் ‘7G’ ரிலீஸ்! Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, இயக்கியுள்ள மிரட்டலான ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘7G’. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

"7G" Tamil Movie
“7G” Tamil Movie

Frontline hospital Trichy

ஒரு முழுமையான த்ரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து இந்த ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இப்படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

"7G" Tamil Movie
“7G” Tamil Movie

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜு V டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.