அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!.. ஐபெட்டோ வா.அண்ணாமலை வாழ்த்து

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழர் தலைவர் திராவிட கழகத் தலைவர் மானமிகு   ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு இன்று 93 வது பிறந்தநாள்!.. தமிழ்நாடு மட்டுமல்ல;  உலகம் முழுவதும் உள்ள திராவிட பற்றாளர்கள், தமிழர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் அவரது பிறந்த நாளினை  கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்!.

திராவிடம் என்ற சொல் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடம் என்ற சொல் ஆசிரியர் அய்யா அவர்களின் அடையாள முகவரியாக இருந்து  செயல்பட்டு வருகிறது என்றால்  மிகையாகாது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

கி.வீரமணிதேசிய கல்விக் கொள்கை ஆபத்து என்றாலும்,  தாய்மொழிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும்,  தமிழ்நாடு எந்த வகையில் யாரால் வஞ்சிக்கப்பட்டாலும்  93 வயதிலும்   எழுத்திலும், பேச்சிலும்  களம் காண்பதை… பார்க்கும் போது  நமக்கே வியப்பாக தோன்றுகிறது!..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி திராவிட பற்றுடைய அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் ஆசிரியர் ஐயா அவர்களை   மையப்படுத்திதான் முதன்மைப்படுத்திதான் வாழ்த்தினை பெற்று வருகிறார்கள்!.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மூன்று முறை கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட போதும்!… பீனிக்ஸ் பறவையாக  மீண்டும் எழுந்து வந்து நம் அனைவருக்கும் திசைக்காட்டியாய் விளங்குகிறார்!..

அண்ணன் ஐபெட்டோ அவர்கள் மீது தனி  அன்பும் அக்கறையும், செல்லமாக பேசிப் பழகுகிற ஒரு வாய்ப்பினையும் இன்றளவும் வழங்கி வருகிறார்!.. என்பது நமக்கெல்லாம் பெருமைக்கும் பெருமையினை சேர்க்கக்கூடிய நிகழ்வாகும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் அவருடைய தனி அலைபேசியில் அழைத்தால் என்ன அண்ணாமலை!.. சொல்லுங்க நல்லா இருக்கீங்களா! என்று வருகிற அந்த குரல் நம் இதயத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!..

ifecto annamalai
ஐபெட்டோ வா.அண்ணாமலை

நம்முடைய முக்கியமான  புலனப் பதிவுகளை திராவிட கழக பொதுச்செயலாளர் அவரது அன்பு மகனார் சகோதரர் அன்புராஜ் அவர்கள் வழியாக இன்னமும் பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

அதேபோல் ஆசிரியர் இயக்கக் குரலையும் தொடர்ந்து படித்து வருகிறார்!.. என்பதையெல்லாம்  அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!..

தொண்டு செய்பவர்களுக்கு சாவு வருவதில்லை!.. என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!..

93 வது பிறந்த நாளில் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று… தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் வாழ்த்தி  வணங்குகிறோம்!..

சமூக நீதிக் காவலர் நீடு வாழ்க! நீடு வாழ்க!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.