331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !
மதுரை மாநகர காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் அவனியாபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்அப்போது. அவனியாபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சிவிப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 26 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைபொருள் கொண்டு வந்தது தெரிய வந்தது. போலீஸார் சோதனை செய்த செய்த போது காரில்16 மூட்டைகளில்2 34 கிலோ கணேஷ் புகையிலைப் பொருட்களும் 10 மூட்டைகளில் 97.5 கிலோ கூல்லிப் எனப்படும் போதபொருள் இருந்தது தெரிய வந்தது.
எனவே மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் பரத் வைஸ்நவ் வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் உள்ள மகாவீர் என்பவருக்கு டெலிவரி செய்ய 331.5 எடையுள்ள புகையிலைப் பொருட்களைக் கொண்டு வந்தது தெரியவந்தது .
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.