வானளாவிய அதிகாரமா… அண்ட சராசரங்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமா?
மே 25ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா கடிதம் அளித்ததாகவும் அதனை சட்ட விதிகளின்படி பரிசீலித்து ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் சபாநாயகர் செய்தியாளர்கள் முன் அறிவித்தார்.
அதற்கு அடுத்த நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவையும் ஏற்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஜூன் ஒன்பதாம் தேதி இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை துவங்கிவிட்டது, என்ன நடவடிக்கை என்ன பிறகு அறிவிக்கப்படும் என்று அவரது வாயாலேயே மீண்டும் கூறியுள்ளார்.
மே 25ஆம் தேதி ராஜினாமா செய்து, அந்த சட்டமன்ற தொகுதிகள் காலி என சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்… அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கையை துவங்க முடியும்?
என்ன நடக்கிறது? வானளாவிய அதிகாரமா… அண்ட சராசரங்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமா?
— ஆரா, பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.