அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்திய உடற்கல்வி அறக்கட்டளை (physical education foundation of india) யின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக செயலாற்றிவரும் பேராசிரியர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி, தமிழகத்தின் 107 ஆண்டுகால புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டு திருச்சியில் இயங்கிவரும் கல்வி நிறுவனமான தேசியக் கல்லூரி (தன்னாட்சி)-யின் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறையில் குறிப்பாக உடற்கல்வி குறித்த விழிப்புணர்வை பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கில், எக்ஸெல் குழுமத்தின் தலைவர் ரோட்டரி இன்டர்நேஷனிலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் அவர்களின் பங்களிப்போடு, ம.நீ.மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிகழ்வையும் நிகழ்த்திக்காட்டியிருந்தார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி.
”கல்லூரியை கல்விச் சிறப்பின் புதிய உயரங்களுக்கு வழிநடத்துவதில் அவர் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். டாக்டர் பிரசன்ன பாலாஜியிடம் நான் குறிப்பாகப் போற்றும் விஷயம், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் சிறப்பின் ஒரு அளவுகோலாக மாற்றும் அவரது திறன்தான். இந்த மதிப்புமிக்கப் பொறுப்பிற்கும் அவர் அதே பேரார்வத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டாக்டர் பிரசன்ன பாலாஜி அவர்களின் முதல்வர் பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமாகவும் நிறைவாகவும் அமைய வாழ்த்துகிறேன்.” என்பதாக நெகிழ்வோடு வாழ்த்தியிருக்கிறார், எம்.எம்.எம். முருகானந்தம். அங்குசம் சார்பில் நாமும் நமது வாழ்த்துகளை சொல்லிவிடலாம்!

HARINI JEWELLERS TRICHY

—  அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.