மண் எடுக்கக்கூட அனுமதியில்லை! மனு கொடுத்தும் தீர்வு இல்லை!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாந்தகரம், கரையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த முரியேசன், மாட்டுக் கொட்டகை அமைப்பதற்காக உறவினரின் நிலத்தில் மண்ணை எடுத்து மேடுபடுத்த அனுமதி கோரி அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஜூலை மாதம் மனு அளித்தும் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறுகிறார்.

மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாததால், வாகன உரிமையாளர்களும் மண் எடுக்க வர மறுப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், மீண்டும் மனு அளித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு விதிமுறைகளின்படி அனுமதி வழங்குவது குறித்து தெளிவான பதில் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மண் அள்ள அனுமதி மறுப்பு! மனு கொடுத்தும் தீர்வு இல்லை! மண் அள்ளச் சொல்றாங்க… அனுமதி தர மறுக்கிறாங்க!

முழுமையான வீடியோவை காண

Comments are closed, but trackbacks and pingbacks are open.