போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இனாம்புலியூர் பகுதியை சேர்ந்த 07 வயது சிறுமியை வகுப்பு ஆசிரியரான ஜெயராஜ் சூசைநாதன் (56), த.பெ.துரைராஜ், தர்மநாதபுரம் அந்தோணியார் கோவில் தெரு, பாலக்கரை, திருச்சி மாநகரம் என்பவர் 13.02.2025 அன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாருக்கு . 08/25 U/s 9(f), 9(m), 9(1) r/w 10 of POCSO Act ன் படி 18.02.25 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (12.10.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் எதிரி – ஜெயராஜ் சூசைநாதன் (56), த.பெ.துரைராஜ், தர்மநாதபுரம் அந்தோணியார் கோவில் தெரு, பாலக்கரை, திருச்சி மாநகரம் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான முன்னாள் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயசித்ரா அவர்கள் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய நீதிமன்ற பெண் காவலர் திருமதி. நித்தியா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப வெகுவாக பாராட்டினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.