அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை துவக்கம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறையில் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் “A” G.O Ms No. 176, Home (Police-12) Dept., dt. 10.05.2026-ன் படி உருவாக்கப்பட்டுள்ளது. அப்படையில் ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒட்டுநருடன் கூடிய ஒரு ஜீப் ஆகியவை தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனிப்பட்ட வகையில் இப்படைக்கான பயிற்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படையினர் இரண்டு shift-களாக பிரிக்கப்பட்டு காலை 07.00 மணி முதல் 14.00 மணி வரையிலும், மதியம் 14.00 மணி முதல் 24.00 மணி வரையிலும் பணிபுரிவார்கள்.
இந்த “சிங்கப்பெண்” படையை நேற்று (09.06.26) மாலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை இராகிருஷ்ணன் விளையாட்டரங்கில் துவங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, அந்த அந்த மாவட்டத்தில் இன்று (10.06.26) முதல் இப்படையை தொடங்க அறிவுறுத்தியதன் பேரில் இப்படையினருக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப  எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்று தக்க அறிவுறைகளை வழங்கி சிறப்பான முறையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி இன்று மதியம் 14.00 மணியவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் “சிங்கப்பெண்” படையை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.