AI data center எனும் கொடிய அரக்கன்?
AI data center தமிழ்நாட்டில் வேண்டாம் என்பது தான் என் நிலைப்பாடாக இருந்தது காரணம் சுற்றுசுழல். AI Data Center என்று சொல்ல இனிமையாக இருக்கும். பளபளப்பாக இருக்கும். அண்மைய AI ஹைப்பிற்கு கெத்தாக கூட இருக்கும். ஆனால், AI data Center கள் என்பது பசு தோல் போர்த்திய பகாசூரன். அதற்கு மின்சாரமும் , தண்ணீரும் கொடுத்து மாளாது.
ஒரு சுமாரான AI Data Center இயங்க வேண்டுமானால் கூட ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். அதுவே மின்சாரம் என்றால், சுமார் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வேண்டும். 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் என்பது ஒரு நாளைக்கு 1 இலட்சம் வீடுகளுக்கு தேவைப்படும் மின்சாரம். மின்சார வண்டி என்றால், சுமார் 1 கோடி கிலோமீட்டர் பயணம் செய்யலாம்.
ஆனால், இதையெல்லாம் எந்த நிறுவனமும் அரசிடம் காசு கொடுத்து வாங்காது. வேலை வாய்ப்பு, ஆளும்கட்சிக்கு நற்பெயர் என லாபி செய்து மானிய விலையில் தான் வாங்கும். இதனால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு ?
தரும் வேலை வாய்ப்பை விட பாதிப்பு அதிகம். அதனால், அமெரிக்காவில் AI datacenter களை எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்கள் பல இயக்கங்கள் நடத்துகிறார்கள். என் நிலைபாடும் AI data Centerகள் வேண்டாம் என்பது தான்.

எல்லாம் ஒரு நாள், இரண்டு செய்திகளை படிக்க்கும் வரை தான். முதல் செய்தி அமெரிக்காவில் AI data center களை எதிர்க்கும் சில குழுக்களை சீன உளவுத்துறை நிதி கொடுத்து இயக்கும் முதல் செய்தி. வழக்கமாக போராடும் மக்களை பார்த்து நீ எதிரியின் கைக்கூலி என்பது இயல்பு தான் என்றாலும் சீனாவில் AI data center கள் எதிராக போராட்டம் நடப்பதில்லை.
AI தான் வருங்காலத்தில் நாடுகளின் ஆதிகத்தை நிறுவ முதன்மை காரணம், AI Infra கொண்டிருக்கும் நாடே வல்லாரசு என்பதால் AI data center சுற்றி ஒரு geo political சூழல் உருவாகிவிட்டது.
அடுத்த செய்தி ஒரு இடதுசாரி பத்திரிக்கையில் AI data center களுக்கு எதிரான போராட்டம் என்பது ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் AI கொடுக்க போகும் நம்பிக்கையையும் நல்வாழ்வையும் எதிர்த்த போராட்டம் என்ற வரிகள்.
பொதுவாக அமெரிக்காவில் பெரு நிறுவனக்களின் ப்ராஜெக்டுகளை இடதுசாரிகள் எதிர்ப்பார்கள் என்ற பொதுபிம்பத்தை உடைத்து AI data center எதிர்ப்பு போராட்டதை விட எப்படி அதை மக்கள் தங்கள் வயப்படுத்த வேண்டும் என்ற அந்த தோழரின் கட்டுரை கொடுத்த மாற்று பார்வை.
AI Data center கள் நாட்டின் இன்றியமையாத தேவை அறிவியல்,அரசியல் ஆனால் சுற்று சூழல் கேடும் உண்டு. மொத்தத்தில் geo political சூழலில் AI data center எனது இறையான்மை, அதிகாரம். இதை பற்றிய என் தேடலின் , விவாதத்தின் பதிவு.
வினோத் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு நிபுணர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.