அரசு இதனை அங்கீகரிக்கிறதா?

புத்தக விற்பனையகம் ஒன்றில், எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

கல்விக்கூடங்களில் எழுத பயன்படுத்தும் குறிப்பேட்டில் ஒரு கட்சியின் சின்னம், பெயர், கொடி, அக்கட்சியின் தலைவர் படம் இடம்பெற்றுள்ளது.

ஒரு குறிப்பேட்டின் விலை 35 ரூபாயாம். விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி கல்வி பயில வேண்டிய மாணவர்கள், அரசியல் கட்சியின் அடையாளங்களை அச்சிட்டுள்ள, இத்தகைய குறிப்பேடுகளை எழுத பயன்படுத்தலாமா?

அரசு இதனை அங்கீகரிக்கிறதா?

என்ன பதில் சொல்லப் போகிறது, பள்ளிக் கல்வித் துறை?

(அந்த குறிப்பேட்டில் அச்சிட்ட அச்சங்கத்தின் பெயரோ, விலைக் குறிப்போ ஏதுமில்லை)

– பாலசுப்பிரமணி, பத்திரிகையாளர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.