சொல்லவே கஷ்டமா தான் இருக்கு… 😔
துப்பாக்கி, கத்தியெல்லாம் கிடையாது. மீம்ஸ்-ம் ரீல்-ஸும் தான்...
“எல்லாரும் நல்லாருக்குனு சொன்னாங்க…”, “எல்லாரும் இதுதான் பெஸ்ட் னு சொன்னாங்க…” அப்படி நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அந்த நிறைய பேர் யார் அப்படின்னு கேட்டால் அவங்களுக்கு தெரியாது.
“உண்மையாவே நம்மளோட இஷ்டப்படி தான் நம்ம வாழுறோமா?” அப்படின்னு ஒரு சந்தேகம் வந்ததது.
முன்னாடியெல்லாம் வேற வேலை எதுவும் இல்லைனா, படம் பார்க்க தியேட்டர் போவோம். இல்லைனா நமக்கு புடிச்ச ஹீரோ படம் வந்தா தியேட்டர் போவோம். ஆனா இப்போ, என்ன படம் ரிலீஸ் ஆயிருக்குனு தெரிஞ்சுக்க ஒரு ஆப், அந்த படம் பாக்கலாமா-னு முடிவு பண்ண ஒரு ஆப், அது எந்த தியேட்டர்-ல ஓடுதுனு தெரிஞ்சுக்க ஒரு ஆப், டிக்கெட் போட இன்னொரு ஆப். இப்படி எல்லாத்தையுமே ஃபோன்-ல தான் பண்றோம்.

ஆனா சாதாரணமா இத ஃபோன் அப்படின்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்-னு பல சோஷியல் மீடியா இருக்கு.
ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இங்க ஒரு போர் ஆரம்பிச்சிடுது. அதுல துப்பாக்கி, கத்தியெல்லாம் கிடையாது. மீம்ஸ்-ம் ரீல்-ஸும் தான்.
“இந்த படத்த பார்க்காம விட்டுட்டா உங்க வாழ்க்கையே வேஸ்ட்”. “நம்ம குடுத்த டிக்கெட் காசு அந்த ஒரு சீனுக்கே முடிஞ்சுது”. அப்படின்னு படத்துல இருந்து ஒரு இமேஜ் வச்சு ஆயிரக்கணக்கான மீம் வரும்.
ஒரு முகத்தை, ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் போது அது மேல நமக்கு ஒரு familiarity உருவாகும். இதை Mere Exposture Effect அப்படின்னு சொல்லுவாங்க. ஒரே படம் சம்பந்தப்பட்ட மீம்கள், ரீல்கள் திரும்பத் திரும்ப பார்க்கும் போது நம்ம அதுல சிக்க வாய்ப்பு இருக்கு. அதே படத்தோட ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விளம்பரம் உங்கள தேடி வரப்போ நீங்களே டிக்கெட் போட்டிருவீங்க.
“FDFS போகலையா?”, ‘இன்னும் பார்க்கலையா?” அப்டின்னு கேள்விகள் வரும் போது, அப்போ நம்ம மட்டும் தான் இன்னும் பார்க்கல போல… அப்படின்னு ஒரு ஃபீல் வரும். “என்னடா நம்ம இப்படி இருக்கோமே”னு அது நம்மள ஃபீல் பண்ண வச்சிடும். அதுக்கு பேரு தான் Fear Of Missing Out (FOMO).

உளவியல்-ல (Psychology) சோசியல் ப்ரூஃப் அப்படின்னு ஒரு விஷயம் இருக்கு. அதாவது 100 பேர் ஒரு விஷயத்த சொன்னால் அது உண்மையா தான் இருக்கும் அப்படின்னு நம்ம மூளையே நம்மள கன்வின்ஸ் (convince) பண்ணிடும். நம்மளும் அதையே நம்ப ஆரம்பிச்சிடுவோம்.
இப்பவெல்லாம் நம்ம பார்க்கிறதுல எது ரீல்ஸ் எது விளம்பரம்னே தெரியல. ஒரு காமெடி மீம் பார்த்தால் கூட அதுல நமக்கே தெரியாம ஒரு விளம்பரம் தான் இருக்கு. அதுல இருக்க பிராடக்டோ, பிராண்டோ நம்ம மூளைக்குள்ள வந்து உட்காந்துக்குது. அது விளம்பரம்னே தெரியாத அளவுக்கு நம்ம மனசுல அதை பதிய வச்சுடுறாங்க.
இது சினிமா, பிசினஸ் அப்படின்னு ஒரு சில டிபார்ட்மெண்ட்-ல மட்டும் இல்ல. கல்வி, மருத்துவம், விளையாட்டு, ரியல் எஸ்டேட், உணவு அப்படின்னு பல டிபார்ட்மெண்ட்ஸ்.
ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடிலாம் டிவி, லேப்டாப், மொபைல் எதாச்சும் வாங்கனும்-னா, தெரிஞ்சவங்ககிட்ட, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்போம். ஆனா இப்போ யூடியூப்-ல ஒவ்வொரு சேனல் ரிவ்யூ தான் மொதல்ல பாக்குறோம். அதுலயும் எதுக்கு நிறைய வீடியோ இருக்கோ அது தான் நல்ல பிராடக்ட்.

ஒரு பொருள பத்தி ஆன்லைன்-ல வீடியோ எதுவும் இல்லனா அந்த பொருள் சரி இல்ல. அதுல ஏதோ பிரச்சனை இருக்கு அப்படி தான் யோசிக்கிறோம்.
இன்னொரு ரொம்ப முக்கியமான டிபார்ட்மெண்ட் இருக்கு. அது தான் அரசியல்.
நம்ம ஓட்டு போடுற அந்த ஒரு செகன்ட் கூட, நம்ம முடிவை நம்மள எடுக்க விடாம வேற யாரோ முடிவு பண்ணுறாங்க. இந்த டிபார்ட்மெண்ட்ல இப்படி இருக்கறது தான் ரொம்ப ஆபத்து.
எலெக்ஷன் நேரத்துல மட்டுமில்ல, வருஷம் முழுக்க இந்த PR மெசின் ஓடிகிட்டே தான் இருக்கும். ஒரு கட்சியில இருக்கிறவர் தப்பு எதாச்சும் பண்ணா, எதிர் கட்சியோட PR டீம் அதை வச்சு 10 மீம்ஸ் போடுவாங்க. அதே கட்சியோட PR டீம் அதை மூடி மறைக்க 100 மீம்ஸ் போடுவாங்க.
டிவி-யையே ஒரு அதிசயமா பார்க்குற பல பேர் இன்னும் இருக்காங்க. அவங்க கையிலும் இப்போ செல்ஃபோன் போயிடுச்சு. அந்த செல்ஃபோன்ல இருந்து வர எல்லாமே அவங்களுக்கு உண்மை தான்.

சரி இத யார் பண்ணுறாங்க? எப்படி பண்ணுறாங்க ? அப்படின்னு கேட்டால், இந்த பிளான உருவாக்குறது ஒருத்தர், அதை execute பண்ண PR (Public Relation) டீம்னு ஒரு டீம் வச்சு, அதுக்கு ரூட்டு போட்டு கொடுக்குறது இன்னொருத்தர். தான் இப்படி ஒரு மிகப்பெரிய விஷயத்தை செய்யறோம்னு தெரியாமலேயே செய்துகிட்டு பல பேர் இருக்காங்க. சோசியல் மீடியா-ல 10,000 ஃபாலோவர்ஸ் இருந்தால் போதும் நானும் இன்புளுயன்ஸர் தான், அப்படின்னு பல பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எல்லாரும் இதுக்கு ஒரு காரணம் தான்.
கேள்வி கேட்டால் தான் எதுவா இருந்தாலும் மாறு அப்படின்னு சொல்லுவாங்க. அடுத்த முறை ஏதாவது முடிவு எடுக்கறப்போ “நீங்க எடுக்குற முடிவு உங்களோடது தானா?’ அப்படின்னு நீங்களே உங்கள கேட்டுப் பாருங்க…







Comments are closed, but trackbacks and pingbacks are open.